ஏரியை உடைத்து நீரை வெளியேற்ற செம்பாக்கம் மக்கள் எதிர்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2020
01:13

பல்லாவரம் :சீரமைப்பு பணிக்காக, ஏரி கரையை உடைத்து, நீரை வெளியேற்றிய, பொதுப்பணித் துறையின் செயலுக்கு, செம்பாக்கம் பொதுமக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். கடந்தாண்டு ஏரி வறண்டு கிடந்த போது, சீரமைப்பு பணிகளை செய்யாமல், ஏரி நீரை வெளியேற்றுவது நியாயமா என, அதிகாரிகளிடம், அவர்கள் கேள்வி எழுப்பினர். 110 ஏக்கர்பல்லாவரம் - சிட்லப் பாக்கம் - செம்பாக்கம் ஆகிய, மூன்று உள்ளாட்சிகளின் எல்லையில், செம்பாக்கம் ஏரி உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, 110 ஏக்கர் பரப்பு கொண்டது. பெரும்பகுதி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, குடியிருப்புகளாக மாறிவிட்டது.எஞ்சியுள்ள பகுதியும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால், பல வழிகளில் இருந்து, கழிவு நீர் ஏரியில் கலக்கிறது. மற்றொரு புறம், ஆகாய தாமரை வளர்ந்து, ஏரியை மூடிவிட்டது. இதனால், ஏரி தண்ணீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசுகிறது.இந்த ஏரியின் கலங்கல், அஸ்தினாபுரத்தை அடுத்த திருமலை நகர் வழியாக செல்கிறது. மழைக் காலத்தில், ஏரியின் உபரி நீர், கலங்கல் வழியாக வெளியேறி, அருகேயுள்ள நன்மங்கலம் ஏரிக்கு செல்லும். சில நாட்களாக பெய்து வரும் மழையில், ஏரி நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில், திருமலை நகரில், கலங்கலை ஒட்டி, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் கரையை உடைத்து, பொதுப்பணித் துறையினர், தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். தற்போது, ஏரியில் தேங்கியுள்ள தண்ணீர், கால்வாயில் ஆறாக ஓடி, அருகேயுள்ள ஏரிக்கு செல்கிறது.இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:கரையை உடைத்து, இரண்டு நாட்களாக, தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். பொதுப்பணித் துறையினரிடம் கேட்டபோது, 'ஏரியை துார் வார போகிறோம், அதனால் தான், தண்ணீரை வெளியேற்றுகிறோம்' என்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், இதையே கூறி, தண்ணீர் வெளியேற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.3 ஆண்டுகள்பொதுப்பணித் துறையே, இப்படி செய்வது வேடிக்கையாக உள்ளது. மழைக் காலத்தில் தான் துார் வார வேண்டுமா? கோடையில் ஏரி வறண்டு கிடந்த போது, துார் வாரும் பணியை செய்திருக்கலாம். இன்றைய காலக்கட்டத்தில், ஏரியில் தண்ணீர் தேங்குவது என்பது, அரிதாக உள்ளது.அப்படியே தேங்கினாலும், இப்படி கரையை உடைத்து, வெளியேற்றி விடுகின்றனர். செம்பாக்கம் ஏரியில், மூன்று ஆண்டுகளாக தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இதனால், கோடையில், ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில், நிலத்தடி நீர் குறைந்து, தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:செம்பாக்கம் ஏரியில், ஆகாய தாமரையை அகற்றி, பல ஆண்டுகளாக தேங்கியுள்ள கழிவுகளை, தனியார் தொண்டு நிறுவனம் அகற்றவுள்ளது; கரையை பலப்படுத்தவும் உள்ளனர். அதனால், அவர்கள் பணி செய்வதற்கு ஏதுவாக, தண்ணீரை வெளியேற்றி வருகிறோம். தண்ணீர் வற்றியவுடன், அந்நிறுவனம் பணியை துவங்கும். ஏரியில் தேங்கியிருப்பது முழுதும் கழிவு நீர் என்பதால் தான், அதை வெளியேற்றுகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.ஐயமில்லைபொதுப்பணித் துறை அதிகாரிகளின் கூற்றுபடி, ஏரியில் தேங்கியிருப்பது கழிவு நீர் என்றால், ஏரியை துார் வாருவதற்கு முன், அதில் கழிவு நீர் கலக்க, இணைப்பாக உள்ள கால்வாய்களை தான் அடைக்க வேண்டும்.இல்லாவிடில், துார் வாரிய பின், கூடுதல் கழிவு நீர் தேக்கும் தொட்டியாக தான், செம்பாக்கம் ஏரி மாறும் என்பதில் ஐயமில்லை.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
16-ஜூலை-202010:22:46 IST Report Abuse
RADE யாரோ காசுல வர்ற வரி பணம் இவங்க சம்பளமா வாங்கும் பொது இவங்க எதுக்கு மக்கள் நலம் மற்றும் இயற்கை நலம் பற்றி கவலை படுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X