சிவகங்கை:சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் 65 பேர் பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வு எழுதி நுாறு சதவீத தேர்ச்சி பெற்றனர்.
இப்பள்ளி எஸ்.கிேஷார் 500 க்கு 476 பெற்று முதலிடம். இரண்டாம் இடம் ஆர்.ஜெயக்குமார் 469, மூன்றாம் இடம் ஆர்.சித்தார்த்தன், பி.சினேகா 460 மதிப்பெண் பெற்றனர். மாணவர் எஸ்.கிஷோர் ஆங்கிலம் - 92, அறிவியல், சமூக அறிவியல் - 96, ஆர். ஜெயக்குமார் ஆங்கிலம் - 92, கணிதம் -97, ஜெரோலின் நிகிதா ஆங்கிலம் - 92, எஸ்.சஞ்சய் ஹிந்தி 99, ஏ.சந்தோஷ் சமஸ்கிருதம் - 90, ஆர். சித்தார்த்தன் கணிதம் -97, சமூக அறிவியல் -96 ஆகிய மதிப்பெண்களை எடுத்து பள்ளி ஆசிரியர்களிடம் பாராட்டு பெற்றனர்.