காசிமேடில் குவிந்த வியாபாரிகள்: சமூக இடைவெளி கேள்விக்குறி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2020
23:55

காசிமேடு : போலீசார் பல கட்டுப்பாடுகள் விதித்தும், காசிமேடு மீன்பிடி சந்தையில், வியாபாரிகள் சமூக இடைவெளியின்றி, மீன்களை வாங்கி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



கொரோனா பரவலால், தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மார்ச் 24 முதலே, ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத காசிமேடு விசைப்படகு மீனவர்கள், மீன்பிடி தடை காலம் முடிந்தும், மீன் விற்க ஏற்ற சூழல் இல்லை என, மீன் பிடிக்க செல்லவில்லை.இந்நிலையில், இரு வாரங்களுக்கு முன், படிப்படியாக ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற விசைபடகு மீனவர்கள், கரை திரும்பி வருகின்றனர்.



இந்நிலையில், கொரோனா பரவலால், காசிமேடு மீன்பிடி சந்தையில், சில்லரை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மாறாக, அடையாள அட்டை வைத்துள்ள மொத்த வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த வாரம், வியாபாரிகள் அதிகளவில் காசிமேடில் அனுமதிக்கப்பட்டதால், அங்கு சமூக இடைவெளி கேள்விக்குறியாகி, பெரும் சர்ச்சை வெடித்தது.



இந்நிலையில், இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால், நேற்று அதிகாலையே, காசிமேடு மீன் பிடி சந்தையில், அதிகளவில் மக்கள் கூடுவர் என, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.நான்கு சோதனை சாவடிகள் அமைத்து, உரிய அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே, மீன் வாங்க அனுமதிக்கப்பட்டனர்.



அனுமதிக்கப்பட்டவர்களும், சமூக இடைவெளியின்றி மீன்களை வாங்கியதால், பலரும் அதிர்ச்சி அடைந்தனர். தவிர, குறுக்கு வழிகளில், சந்தைக்குள் நுழைந்த சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் சிலரும், ஆங்காங்கே சுற்றித் திரிந்ததை காண முடிந்தது. ஒலிபெருக்கியில் எச்சரிக்கை, சோதனை சாவடிகள், இரும்பு தடுப்புகள் என, போலீசார் எத்தனை கிடுக்கிப்பிடி போட்டாலும், மீன் வாங்கும் ஆர்வத்தில் மக்கள் காசிமேடில் மொத்தமாக குவிவதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



நேற்று, கெடவரா மீன்கள், 2 கிலோ முதல், 10 கிலோ வரையில் விற்பனைக்கு வந்தன. தவிர, பாறை, வாலை, வவ்வால், சங்கரா, நெத்திலி, புள்ளி திருக்கை, கானாங்கெளுத்தி, காரப்பொடி உள்ளிட்ட மீன் வகைகள் அதிகளவில் வரத்து இருந்தன.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
28-ஜூலை-202011:33:27 IST Report Abuse
Visu Iyer சமூக இடைவெளி என்று சொல்றீங்க.. நாடு முழுவதும் நடக்கும் சுதந்திர தின விழாவின் போது பாருங்கள்.. அப்புறம் சொல்லுங்கள்..
Rate this:
Cancel
NoBs - chennai,இந்தியா
27-ஜூலை-202010:45:54 IST Report Abuse
NoBs இந்த சந்தையில் பங்கேற்பவர்களை அடையாளம் காட்டும் வகையில் அவர்கள் கையில் ஒரு முத்திரையை பதித்து அவர்கள் தொற்று நோய்க்கு ஆளாகும்போது அவர்களுக்கு சிகிச்சை வரிசை கிரமத்தில் கடைசியாகவும் முழுத்தொகை அடிப்படையிலும் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். எந்த மனிதர்களுக்கு சுய கட்டுப்பாடு இல்லையோ அவர்கள் விதைப்பதை அவர்களே அறுவடை செய்ய விட்டால் மாற்றம்......
Rate this:
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
26-ஜூலை-202017:27:43 IST Report Abuse
Nalam Virumbi மீன் வியாபாரம் நிறுத்தப் படவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X