| சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது Dinamalar
சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 ஆக
2020
23:22

விருத்தாசலம் : சிறுபாக்கம் அருகே சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.



விருத்தாசலம் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் பிருந்தா தலைமையிலான போலீசார் கடந்த மாதம் 12ம் தேதி, வடபாதி - வள்ளிமதுரம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறுபாக்கம் அடுத்த பனையாந்துார் பகுதியைச் சேர்ந்த சரவணன், 25, தனது பைக்கில், 110 லிட்டர் சாராயம் கடத்திச் சென்றது கண்டுபடிக்கப்பட்டது.இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.



இவர் மீது, விருத்தாசலம் மதுவிலக்கு அமல் பிரிவு ஸ்டேஷனில் 3 வழக்குகள், சிறுபாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு வழக்கு உள்ளது. இவரின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., ஸ்ரீ அபினவ் பரிந்துரையின் பேரில், சரவணனை ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சந்திரசேகர சகாமுரி உத்தரவிட்டார். உத்தரவு நகலை சிறையில் உள்ள சரவணனிடம் போலீசார் வழங்கி கையெழுத்து பெற்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X