| திட்டக்குடியில் வேகமாக பரவும் தொற்று Dinamalar
திட்டக்குடியில் வேகமாக பரவும் தொற்று
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 ஆக
2020
23:23

திட்டக்குடி : திட்டக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.



திட்டக்குடி தாலுகாவில் கடந்த ஜூலை 20ம் தேதி வரை, 43 நபர்களுக்கு தொற்று உறுதியான நிலையில், கடந்த 10 நாட்களில் 60 க்கும் மேல் தொற்று பரவி, பாதிப்பு 106 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. செவிலியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து ஆவட்டி, தொழுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூன்று நாட்கள் மூடப்பட்டன. திட்டக்குடி டி.எஸ்.பி., வெங்கடேசன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் போலீசாரிடமும் அச்சம் நிலவுகிறது.



பாதிப்பு காரணமாக ஜூலை 24, 25 மற்றும் 26ம் தேதிகளில் வணிகர் சங்கத்தினர் முழு ஊரடங்கை கடைப்பிடித்தனர்.இருப்பினும் திட்டக்குடி பகுதியில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற விஷயங்களில் பொது மக்களிடையே தொடர்ந்து அலட்சியம் நிலவுகிறது.இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே திட்டக்குடி தாலுகா அலுவலகம், சார்நிலை கருவூலம், போலீஸ் நிலையம், வி.ஏ.ஓ., அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X