| மாவட்டத்தில் முழு ஊரடங்கு: சாலைகள் வெறிச்சோடியது Dinamalar
மாவட்டத்தில் முழு ஊரடங்கு: சாலைகள் வெறிச்சோடியது
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 ஆக
2020
00:12

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி மக்கள் வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.



தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் ஞாயிற்று கிழமைகளில் தளர்வுகளின்றி முழு ஊடரங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி கடலுார் மாவட்டத்தில் நகரம் மற்றும் கிராமங்களில் சிறிய பெட்டி கடைகள் முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை மூடப்பட்டிருந்தன. பால், மருந்து கடைகள் திறந்திருந்தன. அரசு வாகனங்கள், மருத்துவ சேவை வாகனங்கள் தவிர்த்து மற்ற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.



எனினும், பால், மருத்துவ சிகிச்சை வாகனங்கள், அரசு வாகனங்களுக்கு டீசல் நிரப்பப்பட்டது. மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள், மீன் அங்காடிகள், காய்கறி சந்தைகள், இறைச்சி கடைகள் வெறிச் சோடி காணப்பட்டன. மாவட்டத்தில் 7 உட்கோட்டங்களில் உள்ள நிரந்தர சோதனைச் சாவடி, தற்காலிக சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X