| களையிழந்த ஆடிபெருக்கு நீர் நிலைகள் 'வெறிச்' Dinamalar
களையிழந்த ஆடிபெருக்கு நீர் நிலைகள் 'வெறிச்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 ஆக
2020
00:18

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக ஆடிபெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது.


ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கில் வாழ்வு வளம் பெற பொதுமக்கள் கோவில்களுக்கும், நீர் நிலைகளுக்கும் சென்று உற்சாகத்துடன் வழிபாடு நடத்துவர். ஆனால் இந்தாண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால் நீர் நிலைகளில் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டது. கடலுார் மாவட்டத்தில் பெரும்பாலான நீர் நிலைகள் பொதுமக்கள் வழிபாடு இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.



இருப்பினும், சில நீர் நிலைகளில் ஊரடங்கை மீறி பொதுமக்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர். புதுமண தம்பதிகள் திருமண மாலைகளை நீர் நிலைகளில் விட்டு வழிபாடு நடத்தினர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X