| குப்பை அகற்றாததால் நோய் பரவும் அபாயம் Dinamalar
குப்பை அகற்றாததால் நோய் பரவும் அபாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 ஆக
2020
00:20

வடலுார் : வடலுார் பேரூராட்சி குடியிருப்பு பகுதியில் குப்பையை அகற்றாததால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



வடலுார் பேரூராட்சி ராகவேந்திரா சிட்டி, 3வது அவென்யு பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்கு கடந்த சில நாட்களாக பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை சரியாக அகற்றவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவது அதிகரித்து வருகிறது. குப்பை தொட்டி வைக்கவில்லை. பன்றிகள் குப்பைகளை கிளறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகளை அகற்றுவதுடன் அனைத்து தெருக்களிலும் குப்பை தொட்டிகளை வைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X