| விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு Dinamalar
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 ஆக
2020
00:57

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ஆக., மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.



தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், ஜூலை மாதம் முழுதும் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, ஆக., மாதத்தில் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.அதன்படி, இம்மாத முதல் ஞாயிற்றுக் கிழமையான நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இதனால், மாவட்டம் முழுவதும் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.




முழு ஊரடங்கு தடை உத்தரவை மீறி சாலையில் சுற்றிய வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்தும், வழக்கு பதிந்து அபராதம் வசூலித்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X