இருப்பு ! மாவட்டத்தில் 747 மெட்ரிக் டன் நெல் விதைகள்...சாகுபடி இலக்காக 42 ஆயிரம் ஏக்கர் நிர்ணயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2020
01:04

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், இந்தாண்டு 42 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், சொர்ணாவாரி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



இதுவரை 172 மெட்ரிக் டன் நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு, 747 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில், இந்தாண்டு சொர்ணாவாரி பயிராக சாகுபடி 42 ஆயிரத்து 978 ஏக்கர், வேளாண் துறை சார்பில், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 30 ஆயிரத்து 46 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதர வேளாண் பயிர்களான சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் கரும்பு பயிர்கள் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 929 ஏக்கர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.



விழுப்புரம் மாவட்டத்தில், நெல் விதைகள் இதுவரை 172 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டு, 747 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில், இதுவரை 55 ஆயிரத்து 657 மெட்ரிக் டன் உரங்கள், இப்பருவத்தில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.யூரியா 8 ஆயிரத்து 90 மெட்ரிக் டன், டி.ஏ.டி., உரம் 4 ஆயிரத்து 290 மெட்ரிக் டன், பொட்டாஷ் 7 ஆயிரத்து 650 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 14 ஆயிரத்து 620 மெட்ரிக் டன் உடனடி உபயோகத்திற்கு இருப்பில் உள்ளது.பயிர் காப்பீடுபிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2016-2017 முதல் 2019-2020 ம் நிதி ஆண்டு வரை, 7 லட்சத்து 9 ஆயிரத்து 924 விவசாயிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.



இதன் மூலம், 7 லட்சத்து 27 ஆயிரத்து 83 ஏக்கர் சாகுபடி பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில், 2 லட்சத்து 93 ஆயிரத்து 425 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ஆயிரத்து 271 கோடியே 58 லட்சம் ரூபாய் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.நடப்பு காரீப் (குறுவை) பருவத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில், 17 ஆயிரத்து 608 ஏக்கர் நெல் பயிர் காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, 8 ஆயிரத்து 147 ஏக்கரில், 15 ஆயிரத்து 9 விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர்.பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் இதுவரை ரூ.38 கோடியே 47 லட்சம், ஐந்து தவணைகளில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.



உழவர் குழுக்கள்விழுப்புரம் மாவட்டத்தில், நடப்பாண்டில் 58 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்படுவதற்கு, மூலதன நிதியாக 2 கோடியே 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பண்ணை இயந்திரங்கள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில், இத்திட்டத்தில் 19 ஆயிரத்து 500 சிறு, குறு விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X