திருவெண்ணெய்நல்லுார் பகுதியில்மாநில வேளாண்மை இயக்குனர் ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2020
01:06

திருவெண்ணெய்நல்லுார் : இருவேல்பட்டு வட்டார வேளாண்மை அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.



விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த இருவேல்பட்டு வட்டார வேளாண்மை மையத்தில் விவசாயிகளுக்கு விவசாய வேளாண்மை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இணை வேளாண்மை இயக்குனர் ராஜசேகரன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி கலந்துகொண்டு விவசாயிகளிடம் சிறப்புரையாற்றினார்.



அதனை தொடர்ந்து 30 விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு சான்றிதழ் வழங்கி, நான்கு விவசாய குழுக்களுக்கு 20 லட்சம் மதிப்பீட்டில் நெல்நடவு இயந்திரம், உழவு இயந்திரம் போன்றவை மானியத்தில் வழங்கினார்.மேலும் அவர் பேசுகையில்: சொட்டு நீர் பாசனத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், பெருவிவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் வழங்கப்பட்டுவருகிறது. இதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு பைப்புகள், மோட்டார்கள், மற்றும் கீழ்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.



பாரம்பரிய நெல் வகைகளை பாதுகாத்து அதிக அளவில் பயிரிடும் விவசாயிகளை தேர்வு செய்து அவர்களுக்கு அரசு சார்பில் ரூ 1 லட்சம் பரிசு வழங்கப்படுமென கூறினார். துணை வேளாண்மை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார், செல்லபாண்டியன், பெரியசாமி, வேளாண்மை அலுவலர் காயத்ரி, கங்காகெளரி, ஆனந்தி உதவி வேளாண்மை அலுவலர் பாக்கியராஜ், அரிகிருஷணன், சீனுவாசன், ேஹமாலனி, பழனி உடனிருந்தனர். நிகழ்சியில் உதவி வேளாண்மை இயக்குனர் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X