அரசு உத்தரவு ஆனைமலைக்கு இல்லையா? அலட்சியத்தால் இறைச்சி விற்பனை 'ஜோர்!'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

03 ஆக
2020
02:58
பதிவு செய்த நாள்
ஆக 03,2020 01:11

ஆனைமலை:கொரோனா தொற்று பரவல் குறித்த அச்சம் இல்லாமல், கடைக்காரர்களும், அலட்சியத்துடன் அதிகாரிகளும் செயல்பட்டதால், அரசின் முழு ஊரடங்கு உத்தரவு கேள்விக்குறியாகி, ஆனைமலை சுற்றுவட்டாரத்தில், இறைச்சி விற்பனை ஜோராக நடந்தது.


தமிழக, அரசு, கொரோனா பரவலை தடுக்க, ஞாயிற்றுக்கிழமைகளில், முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. ஆனால், நேற்று கோட்டூர் - ஆழியாறு பிரதான ரோட்டிலும், பேரூராட்சியின் மற்ற பகுதிகளிலும் உள்ள இறைச்சிக்கடைகளை திறந்து வைத்து, அமோகமாக விற்பனை செய்தனர்.


கோட்டூரில், அரசு உத்தரவை மதிக்காமல், தைரியமாக, சாதாரண நாட்களைப்போல கடைகளை திறந்து வைத்து இறைச்சி விற்பனை செய்தனர்.பாதி ஷட்டரை இறக்கியும், கடைகளுக்கு அருகில் இறைச்சி வெட்டியும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று, விசேஷ நாள் என்பதால், மக்களும் ஊரடங்கை மதிக்காமல், முண்யடித்துக்கொண்டு வந்து சென்றனர்.


கோட்டூரில் மட்டுமின்றி, ஆனைமலை தாலுகா முழுவதிலும் இறைச்சி விற்பனை ஜோராக நடந்தது. அவ்விடங்களில் எல்லாம், சமூக இடைவெளியை பின்பற்றாமல், முகக்கவசம் கூட அணியாதபடி மக்கள் கூட்டம் அலைமோதியது.அதிலும், சமத்துார் எலவக்கரை குளத்தில், மீன் வாங்குவதற்கு ஒரு பெருங்கூட்டமே நின்றது. நுாற்றுக்கணக்கான பைக்குகளும், ஆட்களும் குளக்கரையில் திரண்டனர்.இந்த விதிமீறலை கோட்டூர், சமத்துார் பேரூராட்சியினர், போலீசார், வருவாய்த்துறை என எந்தத்துறையினரும் கண்டுகொள்ளவில்லை. தொடர் புகார் தெரிவித்ததை அடுத்து, கோட்டூர் - ஆழியாறு ரோட்டில் மட்டும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.


அங்கு, ஒரு கடைக்கு சீல் வைத்து, ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், ஒன்பது கடைகளுக்கு மொத்தம், 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். சமத்துார் குளக்கரையில் நடத்த விதிமீறலை கண்டுகொள்ளவில்லை.ஊரடங்கை முறையாக அமல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டிய அனைத்து அரசு துறை அதிகாரிகளும், நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால், கொரோனா பரவலை தடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வீணாகிறது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X