| கடன் தகராறு: வாலிபரை தாக்கிய நான்கு பேர் கைது  Dinamalar
கடன் தகராறு: வாலிபரை தாக்கிய நான்கு பேர் கைது 
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 ஆக
2020
01:13

செஞ்சி : கடன் தகராறில் வாலிபரை தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.



செஞ்சி அடுத்த மணியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகன் சுரேஷ் 26; இவர் நேற்று முன்தினம் கொங்கரப்பட்டு டாஸ்மாக் கடைக்கு தனது நண்பர் குமார் என்பவருடன் மது அருந்த சென்றார்.அங்கிருந்த கொங்கரப்பட்டை சேர்ந்த பிச்சை மகன் ஆண்டவன் 30; தனது தம்பி அன்பு 28 க்கு, சுரேஷ் தரவேண்டிய கடனை கேட்டு தகராறு செய்தார். கடனை அன்புவிடம் தருகிறேன் என கூறிவிட்டு, மேல்சேவூரில் உள்ள குமாரின் நிலத்திற்கு மது அருந்த சுரேஷூம், குமாரும் சென்றனர்.இவர்களை பின் தொடர்ந்து வந்த ஆண்டவன், அவரது தம்பி அன்பு, உறவினர்கள் விக்னேஷ் 24, மூர்த்தி 20 ஆகியோர் மீண்டும் பணத்தை கேட்டு தகராறு செய்து சுரேஷை அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.



இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து ஆண்டவன் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X