'மறைந்த டாக்டர் பிரனேஷ் நரம்பியல் துறையின் பல்கலை'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2020
01:51

கோவை:கோவை நரம்பியல் துறை மூத்த மருத்துவர் பிரனேஷின் திடீர் மறைவு, கோவையில் உள்ள பல மூத்த மருத்துவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவர், வெறும் மருத்துவராக மட்டுமல்லாமல், மனிதநேயம் மிக்கவராக, ஏழை நோயாளிகளுக்கு உதவுபவராகவும் இருந்தார் என, மூத்த மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.டாக்டர் மணிவாசகம் (நரம்பியல் மருத்துவர்): நல்ல பண்பாளர். அறநெறி மிக்கவர். கடவுள் பக்தி மிகுந்தவர். டாக்டர் மற்றும் நோயாளிகளிடையே இருக்க வேண்டிய உறவு முறை குறித்து, சக மருத்துவர்களுக்கு விளக்கியவர். நோயாளிகளின் துன்பத்தை, தன் துன்பமாக கருதி சிகிச்சை அளித்தவர். அவருடைய மறைவு, சக மருத்துவர்களுக்கு மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கும், பெரும் இழப்பு.-டாக்டர் பார்த்திபன் (நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்): நரம்பியல் மருத்துவர்களுக்கு, சிறந்த வழிகாட்டியாக விளங்கியவர். தன்னிடம் வரும் நோயாளிகளின், குறைகளை கண்டறிந்து, உரிய மருத்துவர்களிடம் அனுப்பி வைப்பார். அந்த நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றியும், குணமடைந்து வருவதையும், விசாரித்து தெரிந்து கொள்வார்.----------டாக்டர் பிரகாஷ் (நரம்பியல் மருத்துவர்): கருணை மிக்கவர். பல ஏழை நோயாளிகளை, தனது காரிலேயே அழைத்து வந்து, ஸ்கேன் செய்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்தவர். மருத்துவ சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாத ஏழை நோயாளிகளுக்கு, தனது சொந்த செலவிலேயே வைத்தியம் பார்த்தவர்.-------டாக்டர் ராஜ்மோகன் (நரம்பியல் மருத்துவர்): மிகுந்த கடவுள் பக்தி மிகுந்தவர். எல்லா செயலும் ஆண்டவன் கருணையினால் நடக்கிறது என்பதில், மிகுந்த நம்பிக்கை உடையவர். யாராவது கடவுள் நம்பிக்கை குறித்து மறுத்து பேசினாலும், அவர்களுக்கு உரிய அறிவுரை வழங்குவார். கடின உழைப்பாளி.-------டாக்டர் மோனி (மனநல மருத்துவர்): பணத்துக்கு ஆசைப்படாதவர். எந்த நோயாளியாக இருந்தாலும், உரிய மரியாதையுடன் நடத்துவதில் அக்கறை கொண்டவர். தன்னுடைய கிளினிக்கில் உள்ள அனைவரும், நோயாளிகளை சிறந்த முறையில் நடத்த வேண்டும் என்று கண்டிப்பாக இருந்தவர். நரம்பியல் துறையில், அவர் ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாக விளங்கினார்.-----ராஜகலா (டாக்டர் பிரனேஷ் உதவியாளர்): நடக்க முடியாத நோயாளிகளை, அவரே தன்னுடைய அறையிலிருந்து, வெளியே வந்து, பரிசோதிப்பார். விலை உயர்ந்த மருந்துகளை தர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், நோயாளிகளின் சூழ்நிலையை அறிந்து, அதே திறனுடைய குறைந்த விலையுள்ள மாத்திரை எழுதித் தருவார். அவரது மறைவு, மருத்துவத்துறைக்கு பேரிழப்பு.------

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X