இலங்கை தாதாவின் சடலம் எரிப்பு: பெண்கள் உட்பட மூவர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2020
04:14

கோவை:போலி ஆவணங்களை பயன்படுத்தி, இலங்கை தாதாவின் சடலத்தை எரித்த இரு பெண்கள் உட்பட மூவரை, கோவை போலீசார் கைது செய்தனர்.



மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர், சிவகாமி சுந்தரி, 36. இவர், கோவையில் தங்கியிருந்த தன் உறவினர் பிரதீப்சிங், 35, மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என, பீளமேடு போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.பிரதாப்சிங்கின் அடையாள சான்றாக, ஆதார் அட்டையை வழங்கினார். வழக்கு பதிவு செய்த போலீசார், பிரேத பரிசோதனைக்கு பின், சடலத்தை ஒப்படைத்தனர்.



சிவகாமி சுந்தரி மற்றும் இலங்கையின் கொழும்பைச் சேர்ந்த அமானி தான்ஜி, 27, என்ற இளம்பெண் ஆகியோர், சடலத்தை மதுரைக்கு எடுத்துச் சென்று எரித்தனர். இந்நிலையில், இலங்கை தாதா உடல் கோவையில் எரிக்கப்பட்டதாக, இலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டதால், சந்தேகமடைந்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர்.



அப்போது தான், உயிரிழந்தவரின் உண்மையான பெயர் அங்கொட லொக்கா என தெரிந்தது. இவர், இலங்கையில் போதைப்பொருள் கடத்தும் நிழல் உலக கும்பலைச் சேர்ந்தவர். பல கொலை வழக்குகளில் தொடர்புடையவர். பெங்களூரில் பதுங்கியிருந்த இவர், போலீசார் தேடுவதை அறிந்து, கோவைக்கு மார்ச் மாதம் வந்துள்ளார். சேரன் மாநகரில் வீடு எடுத்து, உறவினர் அமானி தான்ஜி உடன் தங்கியுள்ளார். அங்கொட லொக்கா, அமானி தான்ஜி ஆகியோர், பெயர், குடியுரிமையை மறைத்து, ஆதார் அட்டை எடுக்க, போலி ஆவணங்களை வழங்கியது தெரிந்தது. இதற்கு, சிவகாமி சுந்தரி, மற்றும் ஈரோட்டை சேர்ந்த தியானேஸ்வரன் உதவி செய்தனர்.



இந்நிலையில், அங்கொட லொக்கா உயிரிழந்துள்ளார். போலி ஆவணம் அளித்தது தொடர்பாக, சிவகாமி சுந்தரி, அமானி தான்ஜி, தியானேஸ்வரன் ஆகியோரை பீளமேடு போலீசார் கைது செய்தனர். அங்கொட லொக்காவின் பிரேத பரிசோதனை சான்றில், அவரது உடலில் காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டால், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். ***

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X