புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடி தானம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2020
00:26

சென்னை : வகை, வகையாக ஜடை பின்னி அழகு பார்க்கும் பெண்களுக்கு மத்தியில், 10ம் வகுப்பு மாணவி, இரண்டாவது முறையாக, தன், 12 அங்குல நீள கூந்தலை, கேன்சர் நோயாளிகளுக்கு தானம் வழங்கி, முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.பெண்களின் அழகை மெருகூட்ட செய்வது கூந்தல். பருவமாற்றம் காரணமாக, நீளம் குறைவாக வளரும் முடி, நரை போன்ற பிரச்னைகளை, 15 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் அதிகம் சந்திக்கின்றனர்.முடி வளர, மருந்து, எண்ணெய் பயன்படுத்துவது, நரையை கறுப்பாக்குவது என, பெற்றோர் தன் பெண் குழந்தையின் முடியை அழகாக்க, அதிக பணம், நேரத்தை செலவழிப்பர்.விதவிதமாக ஜடை போட்டு, பூவைத்து மற்றவர்கள் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்வர். மல்லி ஜடை, கோழி கொண்டை ஜடை, ரிசப்சன் ஜடை என, கூந்தலில் தினம் ஒரு ஜடை போட்டு அழகு பார்ப்பர்.வளரும் பருவத்தில், முடி வளர்வதை கையால் அளந்து பார்க்கும் பெண்களுக்கு மத்தியில், இரண்டாவது முறையாக, தன், 12 அங்குல நீள கூந்தலை, கேன்சர் நோயாளிகளுக்கு தானமாக வழங்கினார், 10ம் வகுப்பு மாணவி அபர்ணா.வேளச்சேரியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்- - மைதிலி தம்பதியின் இரண்டாவது மகளான அபர்ணா, பெற்றோரின் பேச்சு தான், என்னை முடி தானம் வழங்க ஊக்கப்படுத்தியதாக கூறுகிறார்.இது குறித்து, அபர்ணா கூறியதாவது: தினமும், வீட்டில் நடக்கும் அம்மா, அப்பா உரையாடலில், சமூகம் குறித்த பேச்சு சில நிமிடம் இருக்கும். சக மனிதனின் வாழ்க்கை முறை, நோயால் பாதிக்கப்பட்டவர்கள் படும் வேதனை, மருத்துவ வசதி, ஏழைகளின் துயரம் குறித்து அதிகமாக பேசுவர். நான் படிக்கும் பள்ளி அருகில், கேன்சர் மருத்துவமனை உள்ளதால், அங்குள்ள நோயாளிகள் குறித்து, ஆறாம் வகுப்பு படிக்கும் போது, அதிகம் தெரிந்து கொண்டேன். என் கூந்தலை அழகுப்படுத்தி பார்க்க விருப்பம் இல்லாததால், அதை கேன்சர் நோயாளிகளுக்கு தானம் வழங்க முடிவு செய்தேன். நான், ஏழாம் வகுப்பு படிக்கும் போது, 14 அங்குல நீள முடியை தானமாக கொடுத்தேன். கடந்த, 1ம் தேதி, இரண்டாவது முறையாக, 12 அங்குல நீள முடியை, அடையாறு கேன்சர் மருத்துவமனைக்கு வழங்கினேன். முடியை துண்டித்த பின், சக மாணவியரின் கிண்டலுக்கு ஆளாக வேண்டி இருந்தது. அதையும் கடந்து, என்னால் ஒரு கேன்சர் நோயாளி பயன் அடைவதை பெருமையாக நினைக்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.மாணவி மற்றும் பெற்றோரை பாராட்ட நினைத்தால், 90431 48388 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X