கடப்பேரி ஏரி கதி தீர்ப்பாயம் உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2020
00:27

சென்னை, : கழிவுநீர் கலந்து, தாம்பரத்தின் கூவமாக மாறிய கடப்பேரி ஏரியை, பழைய நிலைக்கு மாற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க, குழு அமைத்து, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.மேற்கு தாம்பரம், கடப்பேரி ஏரியை சீரமைக்க, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் இணைந்து, 'கடப்பேரி பசுமை பாதுகாப்பு நலச்சங்கம்' என்ற அமைப்பை, ஓராண்டிற்கு முன் உருவாக்கினர்.இந்த அமைப்பினர், 2019, ஜூனில், ஏரியின் போக்கு கால்வாயை கண்டுபிடித்து, ஏரியில் இருந்த கழிவுநீரை வெளியேற்றினர்.பின், ஏரிக்குள் கிடந்த குப்பையை அகற்றும் முன், பருவமழை ஆரம்பித்ததால், பணிகள் நின்றன.தாம்பரம் நகராட்சி, 3.50 கோடி ரூபாய்க்கு, ஏரியை துார் வார, திட்ட அறிக்கை தயாரித்து, நகராட்சி நிர்வாக கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பிய கோப்புகளும் தேங்கின. இதனால், தாம்பரம் ரயில்வே நிர்வாகம், எம்.டி.சி., பணிமனை மற்றும் நகராட்சி பகுதிகளின் கழிவுநீர் கலந்து, ஏரி நீர், மீண்டும் பச்சை நிறத்திற்கு மாறியது.இது குறித்து, ஜூன், 24ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், தாமாக முன்வந்து வழக்கு பதிந்தது.நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர், சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர், பிறப்பித்த உத்தரவு:சுற்றுச்சுழல் துறையின், சென்னை மண்டல மூத்த அதிகாரி, செங்கல்பட்டு கலெக்டர், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் கண்காணிப்பு பொறியாளர், தாம்பரம் நகராட்சி கமிஷனர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. ஏரியை, பழைய நிலைக்கு மாற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, மூன்று மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை, அக்., 5க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X