எண்ணுாரில் ஆடு திருடிய ஐ.டி., ஊழியர் சிக்கினார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2020
00:28

எண்ணுார், ஊரடங்கால், வேலையிழந்த தம்பதி, இரு சக்கர வாகனத்தில், ஆடுகளை திருடிச் சென்றபோது சிக்கினர்.சென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 27; உணவு டெலிவரி நிறுவன ஊழியர். எண்ணுாரைச் சேர்ந்தவர் காவேரி, 27; ஐ.டி., ஊழியர்.இருவரும், ஓராண்டிற்கு முன், காதலித்து திருமணம் செய்தனர். இவர்கள் காதல் திருமணத்தை, பெற்றோர் ஏற்க மறுத்ததால், திருவல்லிக்கேணியில், தனியே வீடு எடுத்து தங்கியுள்ளனர். காவேரி, ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ளார்.ஊரடங்கு காரணமாக, தம்பதி, வேலை, வருமானமின்றி தவித்துள்ளனர். இதனால், வேறு வழியின்றி, இரு சக்கர வாகனத்தில் சென்று, எண்ணுார் சுற்றுவட்டார பகுதிகளில், சாலையில் சுற்றித்திரியும் ஆடுகளை திருடி, விற்று வந்துள்ளனர்.வழக்கம் போல, நேற்று முன்தினம் இரவு, முழு ஊரடங்கை சாதகமாக்கி, எண்ணுார், முகத்துவார குப்பத்தில் சுற்றித் திரிந்த, இரண்டு ஆடுகளை, தம்பதி, இரு சக்கர வாகனத்தில், திருடிச் செல்ல முயன்றனர்.இதைப்பார்த்த பொதுமக்கள், அவர்களை பிடித்து விசாரித்ததில், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். பின், தம்பதியை, எண்ணுார் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், ஊரடங்கால் வேலை இழந்ததால், இதுவரை, 20க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடி, விற்று வந்தது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.வருமானமில்லாத காரணத்தால், தம்பதி ஆடு திருடிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X