மாஞ்சா நுால் விவகாரம் இன்ஸ்., இட மாற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2020
00:30

சென்னை: மாஞ்சா நுால் விவகாரத்தில், மெத்தனம் காட்டிய போலீசார் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சென்னையில், மாஞ்சா நுால் காற்றாடியால், பலர் காயமடைந்தனர்; சிலர் உயிரிழந்தனர். இதையடுத்து, சென்னையில் மாஞ்சா நுாலை பயன்படுத்தி காற்றாடி விட, விற்பனை செய்ய, சேமித்து வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மீறுவோரை கண்காணித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, இன்ஸ்பெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.எனினும், ஆங்காங்கே, மாஞ்சா நுால் காற்றாடி விடும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது.அதன்படி, சில தினங்களுக்கு முன், வில்லிவாக்கம், பாடி மேம்பாலம் அருகே, இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்ற, போக்குவரத்து காவலர் ஜெயகுமார், மாஞ்சா நுால் அறுத்ததில் படுகாயமடைந்தார்.இது குறித்து, வில்லிவாக்கம் போலீசில் கொடுத்த புகாரில், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்த சம்பவம், உயரதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. அப்போது, உரிய நடவடிக்கை எடுக்காத, வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாபு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை, கமிஷனர் மகேஷ்குமார் அகவர்வால் பிறப்பித்துள்ளார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
05-ஆக-202013:50:37 IST Report Abuse
RADE வெறும் பணி இடம் மாற்றம் செய்து என்ன பயன்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X