கோவையில் ஒரே நாளில் 216 பேர் 'டிஸ்சார்ஜ்': கொரோனாவில் மீண்டோர் 3,668 பேர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2020
02:00

கோவை:போலீசார், 10 பேர் உட்பட, 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 216 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். கோவை அன்னூர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரருக்கு கொரோனா உறுதியானதால், அவருடன் பணிபுரிந்து வரும் போலீசாருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு எஸ்.ஐ., இரு முதல்நிலை பெண், 4 முதல்நிலை ஆண் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் என, 10 பேருக்கு தொற்று உறுதியானது. அன்னூர் போலீஸ் ஸ்டேஷன் இரண்டாவது முறையாக தற்காலிகமாக அடைக்கப்பட்டது.அன்னூர் காவலர் குடியிருப்பை சேர்ந்த மூவர், கோவில்பாளையம், காந்திபுரம் காவலர் குடியிருப்பை சேர்ந்த, தலா ஒருவர், கிணத்துக்கடவு தாசில்தார் அலுவலகத்தில் பணியாற்றி வரும், 28 வயது இளைஞர் உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதியானது. நேற்று மொத்தம் கோவையில், 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,458 ஆக உயர்ந்தது.13 பேர் பலிகோவை கணபதிபுதூர் 3-வது வீதியை சேர்ந்த 55 வயது ஆண், ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த 70 வயது முதியவர், ராம்நகரை சேர்ந்த 75 வயது மூதாட்டி, வீரகேரளத்தை சேர்ந்த, 61 வயது முதியவர், சரவணம்பட்டியை சேர்ந்த 72 வயது முதியவர், என, கோவையை சேர்ந்த 11 பேர் பலியானதால், பலி எண்ணிக்கை, 95-ஆக உயர்ந்தது. திருப்பூர் மாவட்டம் ஓடக்கரையை சேர்ந்த 45 வயது பெண், ஈஸ்வரன் மூர்த்தி லே-அவுட்டை சேர்ந்த 62 வயது முதியவர் என, இருவர் பலியாகினர். கோவையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில், 216 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட, 5,458 பேரில், இதுவரை 3,668 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; 95 பேர் உயிரிழந்துள்ளனர். 1,695 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X