33,000 பேர்! ஊரடங்கை மீறியதாக கைதானோர்...கடலூர் மாவட்ட போலீசார் அதிரடி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2020
23:21

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக கடந்த 4 மாதங்களில் மட்டும் 31,000 வழக்குகள் பதிவு செய்து, 33,000 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது வரை 14 ஆயிரத்து 700 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.



.கடலுார் மாவட்டத்தில், கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி உள்ளிட்ட ஏழு காவல் உட்கோட்டங்கள் உள்ளன. இதில், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் 6, சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் 46, மது விலக்கு அமல் பிரிவு 4, போக்குவரத்து காவல் 5 என, 61 காவல் நிலையங்கள் உள்ளன.கொரோனா தொற்று பரவலை தடுக்க, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆட்டோ, பஸ், லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. மருந்து, பால், காய்கறி, மளிகை கடைகள் மட்டும் திறக்க அனுமதிக்கப் பட்டன.



பொது மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது; சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனால் கொரோனா பரவல் குறைந்ததால், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படிப்படியாக ஆட்டோக்கள், பஸ்கள், கார் உள்ளிட்டவை இயக்க அனுமதிக்கப்பட்டது.அதிகரிப்புஇதற்கிடையே கடலுார் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்தது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூலை 1ம் தேதி முதல் பஸ் போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டன.



அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் செல்லும் வகையில் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே தற்போது பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் வரை தொற்று பாதிப்பு 3,575ஐ கடந்துள்ளது. இதுவரை 47 பேர் இறந்துள்ளனர்.இதற்கிடையே ஊரடங்கை மீறியதாக மாவட்டம் முழுவதும் சாலைகளில் தேவையின்றி சுற்றித் திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து, வாகனங்களை அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி கடலுார் மாவட்டத்தில், கடந்த மார்ச் மாதம் 24 ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை (ஆக. 2ம் தேதி) சாலைகளில் தேவையின்றி சுற்றித் திரிந்தவர்கள் மீது 31 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.



அதில், 33 ஆயிரத்து 172 பேர் கைதாகி, ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அதே போல், 14,700 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், ஆட்டோக்கள் 60, கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் 160 மற்றும் இரு சக்கர வாகனங்கள் 14 ஆயிரத்து 580 ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களிடம் இருந்து ஆவணங்களை பெற்றுக் கொண்டு, போலீசார் வழங்கி வருகின்றனர். அதே போன்று முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் செல்பவர்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து, அபராதம் விதித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஆக-202008:44:35 IST Report Abuse
ஆப்பு அவிங்களுக்கெல்லாம் கொரோனா வரலை.... வூட்டுக்குள்ளே பாதுகாப்பா இருந்த பெரிய தலைங்களுக்கு கொரொனா... கொரோனா... உன் மகிமையே மகிமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X