மதுரையை பந்தாடிய கொரோனாவின் கொட்டம் அடங்குது... வைரசை வெல்லும் நிர்வாகத்தின் வியூகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

05 ஆக
2020
14:36
பதிவு செய்த நாள்
ஆக 05,2020 00:19

மதுரை: மதுரையை பந்தாடிய கொரோனாவின் கொட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்குகிறது. நேற்றைய பாதிப்பு 40 ஆக குறைந்தது. மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்களின் வியூகம் படிப்படியாக வைரஸை வெல்கிறது.



மதுரையில் கொரோனாவின் ஆட்டம் மார்ச் 23ல் துவங்கியது. ஜூன் இறுதியில் மின்னல் வேகத் தாக்குதலை துவங்கியது. பாதிப்பும், இறப்பும் கொத்து, கொத்தாய் நேர்ந்தன. ஒன்றரை மாதங்களாக மாவட்டத்தை கதற விட்ட கொரோனாவின் தாக்கம் இப்போது படிப்படியாக குறையத் துவங்கியுள்ளது.ஒரு கட்டத்தில் தினமும் சராசரியாக 370 பேர் பாதிக்கப்பட்டனர். ஜூலை 13ல் அதிகபட்சமாக 464 பேரை வைரஸ் தாக்கியது.



பின்னர் 300, 200 என வேகம் குறைந்தது. நேற்று முன்தினம் பாதிப்பு 106ல் சுருங்கியது. இது நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் நேற்றைய பாதிப்பு இன்னும் குறைந்து 40 ஆனது. கடைசி ஒன்றரை மாதங்களில் பாதிப்பு 100க்கு கீழ் இறங்குவது இதுவே முதன்முறை.இத்தனைக்கும் பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. தொடர்ந்து 3500 முதல் 4500 பேர் சோதிக்கப்படுகின்றனர். இவ்வளவு பேரை சோதித்தும் பாதிப்பு இறங்குமுகம் காட்டுவதால், இது நிலையான குறைதலாக இருக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.பாதிப்பு குறைந்தது எப்படிமாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் கூறியதாவது:கொரோனாவை கட்டுப்படுத்த நாங்கள் தீட்டிய திட்டம் அனைத்து வகையிலும் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் தந்த ஒத்துழைப்பும் முக்கிய காரணம். ஒரு கட்டத்தில் பாதிப்பு தீவிரமடைவதை உணர்ந்து, உடனடியாக பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்தோம். மதுரை அரசு மருத்துவமனையில் முதலில் இருந்த பரிசோதனை வசதி மூலம் தினமும் 1500 பேரை தான் சோதிக்கலாம். புதிய கருவிகளை வாங்கி, இந்த திறனை 5 ஆயிரமாக அதிகரித்தோம். துவக்க கட்டத்திலேயே நோயாளிகளை கண்டுபிடித்து சிகிச்சைக்கு அனுமதித்தோம். இதனால் தான் பரவல் வேகம் குறைந்தது.இதற்கு மாநகராட்சி, புறநகரில் நடத்தப்படும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் பெரிய அளவில் கை கொடுக்கின்றன. இதை தொடர்வோம். பாதிப்பு மீண்டும் அதிகரிக்காமல் இருக்க மக்கள் ஒத்துழைப்பை தொடர்வது அவசியம். வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் எள்ளவும் அலட்சியம் வேண்டாம். அடிக்கடி கைகழுவ வேண்டும்.



இம்மூன்று விஷயங்களில் இதுவரை காட்டிய அக்கறையை விட இனி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் விரைவில் கொரோனாவை இல்லாமல் செய்ய முடியும், என்றார்.


கைகொடுத்த காய்ச்சல் முகாம்


* கொரோனாவின் கொட்டத்தை அடக்கியதில் காய்ச்சல் முகாம்களுக்கு முக்கிய பங்குண்டு. நகர், புறநகரில் தினமும் 273 முகாம்கள் நடக்கின்றன. இதுவரை 7666 இடங்களில் நடந்துள்ளது. 3,16,681 பேர் பங்கேற்றுள்ளனர். தொற்று அறிகுறி தென்பட்ட 34,086 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் தொற்றுடன் 7 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டனர்.* கொரோனா பரிசோதனையை உயர்த்தியதும் பலன் தந்துள்ளது. சராசரியாக தினமும் 4 ஆயிரம் பரிசோதனை நடக்கிறது.



இதுவரை 1,59,320 பேர் சோதிக்கப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு மதுரை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 5133 பேரின் மாதிரிகள் சோதிக்கப்பட்டன. இத்தனை பேரை சோதித்த வரலாறு இதற்கு முன்பு மதுரை அரசு மருத்துவமனைக்கு கிடையாது.* கொரோனா டேட்டாவிவரம்/ நேற்று/ இதுவரைபரிசோதனை/ 4160/ 1,59,320பாதிப்பு/ 40/11487டிஸ்சார்ஜ்/ 192/8984பலி/4/261----

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X