ஐ.ஏ.எஸ்., தேர்வில் பண்ருட்டி மாணவியர் அசத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
00:26

பண்ருட்டி : பண்ருட்டியைச் சேர்ந்த மூன்று மாணவியர் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். மாணவி ஐஸ்வர்யா அகில இந்திய அளவில் 47 வது இடத்திலும், மாணவி பிரியங்கா, 68 வது இடத்திலும், மாணவி கிருஷ்ணபிரியா 514 வது இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.



கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மருங்கூரை சேர்ந்தவர் ராமநாதன். விவசாயி. இவரது மனைவி இளவரசி. கடலுார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், உதவியாளராக பணி புரிகிறார். இவர்களுக்கு இருமகள்கள், ஒரு மகன் உள்ளனர்.இவரது 2வது மகள் ஐஸ்வர்யா. இவர் கடலுாரில் உள்ள செயின்ட் மேரி பள்ளியில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்து முடித்தார். கடந்த 2013 ல் சென்னை அண்ணா பொறியியல் கல்லுாரியில் பி.இ.,சிவில் படித்து முடித்த பின், கடந்த 2018 ம் ஆண்டு நடந்த சிவில் தேர்விற்காக சென்னை அறம் ஐ.ஏ.எஸ்.,அகடாமியில் பயிற்சி எடுத்து தேர்வு எழுதினார்.இதில், அகில இந்திய அளவில் 630 ரேங்க் பெற்று இந்தியன் ரயில்வே அக்கவுண்ட் சர்வீஸ் பணியில் சேர்ந்து, ஜதராபாத்தில் ஐ.ஆர்.எஸ்.,பயிற்சி பெற்று வருகிறார்.



இந்நிலையில் கடந்த 2019ல் எழுதிய ஐ.ஏ.எஸ்., தேர்வின் முடிவில் அகில இந்திய அளவில் 47 ம் ரேங்க் பெற்று தமிழக அளவில் 2 ம் இடம் பிடித்து ஐஸ்வர்யாசாதனை படைத்துள்ளார்.அவர் அளித்த பேட்டி:மாணவி ஐஸ்வர்யா: யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதும் மாணவர்கள் தினமும் படிக்க வேண்டும். தற்போது தகவல்கள் இண்டர் நெட்டில் தமிழ், ஆங்கில மொழிகளில் கிடைக்கிறது. 70 சதவீதம் நமது முயற்சியும், 30 சதவீதம் அகாடமி முயற்சியும் இருந்தால் எளிதில் வெற்றி பெறலாம். ஒரு தடவை போட்டியிட்டு மதிப்பெண் குறைந்தாலும், தொடர்ந்து போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறலாம்.



அனைவரும் கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது குழந்தைகளை கல்வியில் சிறந்து விளங்க படிக்க வைக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவர் கல்வியில் சிறந்து விளங்கினால் அந்த குடும்பம், பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும்.கடலுார் மாவட்டம், சுனாமி, தானே புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் அடிக்கடி பாதிக்கிறது. இயற்கை சீற்றங்களின் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க அடிப்படை கட்டமைப்பை மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.மாணவி பிரியங்கா: கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பண்டரக்கோட்டை கிராமத்தைச்சேர்ந்தவர் சிவப்பிரகாசம். காடாம்புலியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிகிறார்.



இவரது மனைவி விழுப்புரம் மாவட்டம் ஆனத்துாரில் உள்ள தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிகிறார்.இவர்களது மகள் பிரியங்கா, 23; இவர் பண்ருட்டி பாலவிகார் மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த நிலையில் 2013 முதல் 2017 வரை சென்னை கிண்டிஅரசு அண்ணா பொறியியல் கல்லுாரி யில் பி.இ., பயோ மெடிக்கல் படித்தார்.பின், 2017ல் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் ஓராண்டு பயிற்சி பெற்றார். இதையடுத்து 2018ல் நடந்த அகில இந்திய அளவிலான யூனியன் பப்ளிக் தேர்வில் ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் கட்ட தேர்வு, முதன்மை தேர்வில் வெற்றி பெற்று, நேர்முகத் தேர்வில் 20 மதிப்பெண் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார்.



கடந்த 2019ல் பிரியங்கா தேர்வு எழுதியதில் முதல் கட்ட தேர்வு, முதன்மை தேர்வில் வெற்றி பெற்று 2020 பிப்.,மாதம் டில்லியில் நடந்த நேர்முகத்தேர்வில் பங்கேற்றார்.இதன் முடிவு நேற்று வெளியானதில் மாணவி பிரியங்கா, இந்திய அளவில் 68 வது ரேங்க் பட்டியலிலும், தமிழக அளவில் 3ம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார். ஐ.ஏ.எஸ்., வெற்றி குறித்து பிரியங்கா கூறுகையில்,' எனது பெற்றோரின் கடுமையான பணி சுமையில், ஐ.ஏ.எஸ்., தேர்வில் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது.



எனக்கு எந்த மாநில பணி என்பது பற்றி தெரியவில்லை. இந்த வெற்றியின் மூலம், எனது பணிக்காலத்தில் சாதாரண மக்களுக்கு தேவையானவற்றை செய்து தருவேன்' என்றார்.மாணவி கிருஷ்ணபிரியா: இதே போல் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்த பண்ருட்டி நியூ ஜான்டூயி மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியை உமா சம்பத். இவர்களின் மகள் கிருஷ்ணபிரியா; இவர் பிளஸ் 2 வரை பண்ருட்டி நியூ ஜான்டூயி பள்ளியில் படித்தார். பின், சென்னை ஸ்டெல்லா மேரி கல்லுாரியில் பி.ஏ.,சமூகவியல் படித்து முடித்து சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ்.,அகடாமியில் ( சங்கர் ஐ.ஏ.எஸ்) பயிற்சி பெற்றார். இவர் கடந்த 2019ல் நடந்த அகில இந்திய அளவில் ஐ.ஏ.எஸ்.,தேர்வில் 514 ரேங்க் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.மத்திய அரசு தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறி பாராட்டி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X