ரூ.500க்கு அரை மணி நேரத்தில் இ-பாஸ் ரெடி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
00:30

கடலுார் : கடலுாரில், ரூ.500 கொடுத்தால் அரை மணி நேரத்தில் ஒரிஜினல் இ-பாஸ் வாங்கி தரப்படும் என, 'வாட்ஸ் ஆப்' பில் ஆடியோ வைரலாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. ஒரு மாவட்டத்தில் இருந்து மற் றொரு மாவட்டத்திற்கோ, வெளி மாநிலங்களுக்கோ செல்வதற்கு இ-பாஸ் கட்டாயமாக்கப் பட்டது.தற்போது இ-பாஸ் பெறுவது சிரமமாக உள்ள நிலையில், கடலுாரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தும் ஒருவர், ரூ. 500 கொடுத்தால் 30 நிமிடத்தில் இ-பாஸ் எடுத்து தருவதாகவும், இதுவரை 50 ஆயிரம் பேருக்கு இ-பாஸ் எடுத்து தந்துள்ளதாக வாட்ஸ் ஆப் மூலம் வெளியிட்டுள்ள ஆடியோ வைரலாக பரவி வருகிறது.



அந்த ஆடியோவில், ''நமது டிராவல்ஸ் மூலமாக கஸ்டமர்கள், டாக்சி சர்வீசில் உள்ள நண்பர்கள் இ-பாஸ் தேவைப்பட்டால் எனது மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். 30 நிமிடங்களில் பாஸ் தருகிறோம். ஒரிஜினல் பாஸ் என்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம். இ-பாஸ் தேவைப்படுபவர்கள் ஆதார் கார்டை போட்டோ எடுத்து எனது மொபைல் வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வையுங்கள். அதிகபட்சமாக 30 நிமிடங்களில் பாஸ் எடுத்து கொடுத்து விடுவேன். சர்வீஸ் சார்ஜ் ரூ. 500 வாங்கிக் கொண்டிருக்கிறோம். இது வரையில் 50 ஆயிரம் பாஸ்களுக்கு மேல் வாங்கி கொடுத்துள்ளோம் என கூறி, பேசுபவரின் மொபைல் எண்ணையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.விண்ணப்பித்த பலரும் இ-பாஸ் கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள நிலையில், வைரலாக பரவும் ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இது தொடர்பாக கடலுார் நகர போலீசார் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை பிடித்து விசாரிக்கின்றனர். மேலும், இ-பாஸ் குறித்த வைரல் ஆடியோ குறித்தும், பதிவிட்டவர் குறித்து விசாரிக்கும் படி, கலெக்டர் சந்திரசேகர சகாமுரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் கூறுகையில், 'வாட்ஸ் ஆப்பில் பரவும் ஆடியோவின் உண்மை தன்மை குறித்து விசாரிக்கிறோம். விண்ணப்பிப்பவர்கள் எங்கு செல்கிறார்களோ அந்த மாவட்டத்தில் தான் இ-பாஸ் வழங்க முடியும். வாட்ஸ் ஆப் ஆடியோவில் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையில் இ-பாஸ் வாங்கித் தந்ததாக கூறுவது முன்னுக்கு பின் முரணாக உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது' என்றார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X