| டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஒரு மணி நேரம் 'டிராபிக் ஜாம்' Dinamalar
டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஒரு மணி நேரம் 'டிராபிக் ஜாம்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
00:35

கடலுார் : கடலுாரில் டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்ததில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.



கடலுாரில் இருந்து முதுநகர் நோக்கி, டி.என்.73-4646 என்ற பதிவெண் கொண்ட மினி டேங்கர் லாரி, நேற்று 500 லிட்டர் டீசல் ஏற்றிக் கொண்டு, சென்றது. பிற்பகல் 3:30 மணியளவில், முதுநகர், சிவானந்தபுரம் தனியார் பள்ளி அருகே, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் நிறுத்தியிருந்த மினி டெம்போ மீது மோதி, கவிழ்ந்தது.இதனால், லாரி டேங்கரில் இருந்த டீசல் சாலையில் வழிந்தோடியது. டிரைவர் லேசான காயத்துடன் தப்பி ஓடினார்.விபத்து காரணமாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையின் இருபக்கமும் ஒரு கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.



தகவலறிந்த கடலுார் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாகு தலைமையிலான வீரர்கள் வந்து, நுரை தகர்வு வாகனம் மூலமாக, சாலையில் சிதறிய டீசலை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.இவ்விபத்தால், கடலுார்-சிதம்பரம் சாலையில் 3:30 மணி முதல், 4:30 மணி வரை, ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. முதுநகர் போலீசார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.விபத்து குறித்து புகார் தரவில்லை என, போலீசார் கூறினர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X