| ஜீவன் ரக் ஷா பதக்க விருதுகள் Dinamalar
ஜீவன் ரக் ஷா பதக்க விருதுகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
01:25

சிவகங்கை:மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு ஜீவன் ரக் ஷா பதக்க விருதுகள் வழங்கப்படுகிறது.



நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துக்கள், விபத்துக்கள், தீ விபத்துக்கள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.



இந்த விருது பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116 ஏ ஈவேரா பெரியார் சாலை, நேரு பூங்கா, சென்னை 600 084 என்ற முகவரிக்கு 10.9.2020 க்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவகங்கையில் தொடர் கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X