| வழங்கல் Dinamalar
வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
01:39

சிவகங்கை:கொரோனா பரவலை கட்டுப்படுத்த 'ஆர்சனிக் ஆல்பம் 30,' என்ற ஹோமியோபதிமருந்தை அனைத்து வீடுகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



கொரோனா பரவல் தென் மாவட்டங்களில் தினமும் அதிகரித்து வருகிறது. உயிரிழப்பும் உள்ளது. கொரோனாவை அழிக்க தடுப்பு மருந்துஇல்லாத நிலையில் பாதிக்கப்பட்டவர் களுக்கு நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மட்டுமே சுகாதாரத்துறைநடவடிக்கை எடுத்து வருகிறது.மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து பகுதியிலும் உள்ளாட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் வீடுகள் தோறும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.



இதன் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.இதனை தொடர்ந்து இந்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் மனிதர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற மருந்தை பரிந்துரை செய்துள்ளது. கொரோனா தொற்று பரவாமல் இருக்க வீடுகள் தோறும் இந்த மருந்தை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது



தினசரி காலை வெறும் வயிற்றில் 3 மாத்திரைகள் வீதம் தொடர்ந்து 3 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். அதன் பின் வாரம் ஒரு முறை இந்த மருத்தினை எடுத்துக்கொள்ளலாம். இதில் எந்த பக்க விளைவும் கிடையாது. ரத்தத்தில் கலப்பதில்லை. நரம்புகளில் கலந்து சுவாச உறுப்புக்களை துாண்டி செயல்திறனை அதிகரிக்கும். உடலில் உள்ள நோய் தொற்று வைரஸ்களை வெளியேற்றும். சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இல்லாமல் இருந்தாலும் இந்த மருந்தை எடுத்துக்கொள்ளலாம். விரைவில் அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X