| பி.எஸ்.என்.எல்., இணைப்பு துண்டிப்பு Dinamalar
பி.எஸ்.என்.எல்., இணைப்பு துண்டிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
03:03

திருப்புவனம்,:திருப்புவனத்தில் நேற்று முழுவதும் பி.எஸ்.என்.எல்., இணைப்பு துண்டிக்கப் பட்டதால் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டனர்.திருப்புவனத்தில் அருப்புக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்திற்காக புதிய குழாய் பதிக்கும் போது கேபிள் துண்டிக்கப்பட்டது. நகர் முழுவதும் இணைப்புகள் வேலை செய்யாததால் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. குழாய் பதிக்கும் பணி சில மாதங்களாக நடக்கும் நிலையில் பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X