புதிதாக 62 பேருக்கு தொற்று; இதுவரை 3,931 பேர் பாதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
08:51

சேலம்: சேலத்தில் புதிதாக, 62 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை, 3,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


சேலம் மாவட்டம், மாநகர் எல்லையில் நடக்கும் பரிசோதனையில், தொற்று உறுதியாகும் நபர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் தனிமையில் உள்ளனர். அவர்களில், சேலத்தில், 28 பேர், காடையாம்பட்டி, 5, ஓமலூர், 4, செம்மாண்டப்பட்டி, 3, கெங்கவல்லி, 2, ஆத்தூர், காரிப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், சங்ககிரி, இடைப்பாடி, மேட்டூர், நாமக்கல், தலா ஒருவர் என, 50 பேர் குணம் அடைந்ததால், நேற்று வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். நேற்று புதிதாக, 62 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில், சேலம் மாநகரில், 46 பேர், சங்ககிரி, 6, காடையாம்பட்டி, 3, ஆத்தூர், 2, மேச்சேரி, சேலம் ஒன்றியம், தலைவாசல், தலா ஒருவர் என, மாவட்டத்தில், 60 பேருக்கு, தொற்று தெரியவந்தது. தவிர, பெரம்பலூர், புதுக்கோட்டை தலா ஒருவர் என, 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து, சேலம் அரசு மருத்துவமனை, கொரோனா வார்டில், 366 பேர் உள்ளனர். இதுவரை, 3,931 பேர், மாவட்டத்தில், கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.


பி.டி.ஓ., உள்பட 12 பேருக்கு உறுதி: ஆத்தூர் அருகே, நரசிங்கபுரம், வீட்டுவசதி வாரிய பகுதியைச் சேர்ந்தவர், 54 வயது ஆண். இவர், கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ.,வாக பணிபுரிகிறார். இவருக்கு, இரு நாளாக காய்ச்சல் இருந்த நிலையில், நேற்று, தொற்று உறுதியானது. அதே அலுவலகத்தில், கடந்த, 30ல், துணை பி.டி.ஓ., - உதவியாளருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது. பி.டி.ஓ.,வுக்கும் தொற்றால், கெங்கவல்லி ஒன்றிய அலுவலகம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. தம்மம்பட்டி, உலிபுரத்தை சேர்ந்த, 39 வயதுடைய, ஊர்க்காவல் படை வீரர்; தம்மம்பட்டி, காந்தி நகர், 33 வயது ஆணுக்கும் தொற்று உறுதியானது. தலைவாசல், நாவக்குறிச்சி, 33 வயது ஆண்; வடசென்னிமலை, காமராஜ் நகர், 35 வயது பெண்; காஷ்மீரில் இருந்து வந்த, வீரகனூர், கொல்லர் தெரு, 52 வயது ஆண், மாரியம்மன் கோவில் தெரு, 50 வயது பெண், வீரகனூர், 27 வயது தாய், ஆறு மாத பெண் குழந்தை; ஐந்தாவது வார்டு, இருதய அறுவை சிகிச்சைக்கு சென்ற, 70 வயது ஆண்; வீ.ராமநாதபுரம், 52 வயது பெண்; ஏற்காடு, வாழவந்தி, 54 வயது பெண்ணுக்கும் கொரோனா உறுதியானது. ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட, 12 பேர், ஆத்தூர், சேலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X