புகார்தாரரை தாக்கிய இன்ஸ்பெக்டர்? விசாரிக்க எஸ்.பி., உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
08:53

தலைவாசல்: புகார்தாரரை இன்ஸ்பெக்டர் தாக்கியதாக, 'வாட்ஸ்ஆப்'பில் 'ஆடியோ' பதிவு வெளியானதால், விசாரிக்க எஸ்.பி., உத்தரவிட்டார்.


தலைவாசல், ஆரத்தி அகரத்தை சேர்ந்தவர் சின்னசாமி, 35. விவசாய தொழிலாளி. அதே பகுதியில் உள்ள புறம்போக்கில், 30க்கும் மேற்பட்டோர் குடியிருப்பு கட்டியுள்ளதாக, 2017ல், சென்னை, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து, ஆத்தூர் தாசில்தார் விசாரித்து, உயர்நீதிமன்றத்துக்கு அறிக்கை அனுப்பினார். பின், சின்னசாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மக்களால், தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு கேட்டு, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து தலைவாசல் போலீசில் புகார் கொடுக்க அறிவுறுத்தப்பட்டது. கடந்த மாதம், 10ல் புகாரளித்தார். எஸ்.ஐ., பெரியண்ணன் தலைமையில் போலீசார், ஆரத்தி அகரம் சென்று, புகாரில் குறிப்பிட்டவர்களை ஒரு இடத்தில் திரட்டி விசாரித்தார். அப்போது, சின்னசாமிக்கும் அழைத்திருந்தனர். அவர், வெளியூரில் இருப்பதால் வர முடியாது எனக்கூறிவிட்டார். இந்நிலையில், புகாரின் தன்மை குறித்து விசாரிக்க சென்றபோது, தலைவாசல் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன், தன்னை தாக்கியதாக கூறி, அவருடன் பேசும் ஆடியோ பதிவு, 'வாட்ஸ்ஆப்'பில் பரவி வருகிறது. இதுகுறித்து ஆத்தூர் டி.எஸ்.பி., விசாரிக்க, சேலம் எஸ்.பி., தீபாகானிகேர், நேற்று உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் கூறுகையில், ''சின்னசாமிக்கு, பல திருட்டு வழக்குகளில் தொடர்பு உள்ளது. அவர் மீது, ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் பிடிவாரன்ட் உள்ளதால், வீட்டில் தங்குவதில்லை. அவர் கொடுத்த புகார்படி விசாரித்தோம். அவரை, தாக்கியதாக கூறுவது தவறு. என்னிடம் பேசிய ஆடியோ பதிவில், அவர் திரும்ப திரும்ப ஒரு தகவலை கூறுவதால், அது உண்மையாகிவிடாது,'' என்றார்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X