தாய், சேய் அடுத்தடுத்து இறப்பு: சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் முற்றுகை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
08:57

சேலம்: பிரசவத்துக்கு பின், தாய் - சேய் அடுத்தடுத்து இறந்ததால், கொந்தளித்த உறவினர்கள், சேலம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


மேட்டூர் அடுத்த, சூரப்பள்ளி, அம்மன்கோவில் காட்டுவளவை சேர்ந்த, அர்ச்சுனன் மகன் செந்தில்குமார், 29; நெசவு தொழிலாளி. இவர், தன் உறவினர்களுடன் திரண்டு, நேற்று மதியம், 2:00 மணிக்கு, சேலம், நாட்டாண்மை கழக கட்டடம், சுகாதாரப்பணி துணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டார். அப்போது, மனைவி, குழந்தை இறப்புக்கு காரணமான, நங்கவள்ளி அரசு டாக்டர், இரு செவிலியர் மீது நடவடிக்கை கோரி முறையிட்டார்.


பின், செந்தில்குமார் கூறியதாவது: ஓராண்டுக்கு முன் திருமணமானது. மனைவி சகி, 19. அவர், கருவுற்ற பின், 2019, டிச., 16 முதல், நங்கவள்ளி அரசு மருத்துவமனையில், பரிசோதனை செய்து கொண்டார். பிரசவத்துக்கு, கடந்த ஜூலை, 28 நள்ளிரவு, 2:00 மணிக்கு, அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், காலை, 11:48 மணிக்கு, பெண் சிசு பெற்றெடுத்தார். மதியம், 1:00 மணிக்கு, திடீரென மூச்சுத்திணறல் எனக்கூறி, முதலில் சிசு, பின், தாயை, அடுத்தடுத்து, ஆம்புலன்சில், சேலம், அரசு மருத்துவமனைக்கு, மேல் சிகிச்சைக்கு அனுப்பினர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள், சகிக்கு சுகப்பிரசவம் நடக்கவில்லை. தவறான சிகிச்சையால், ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறினர். பின், அன்று மாலை, 6:45 மணிக்கு, சகி இறந்துவிட்டார். தொடர்ந்து, 30 காலை, 10:30 மணிக்கு, சிசுவும் இறந்துவிட்டது. நங்கவள்ளி பெண் மருத்துவர் பணியில் இருந்தும், சகிக்கு பிரசவம் பார்க்கவில்லை. இரு செவிலியரே, பிரசவம் பார்த்தனர். அவர்களின் கவனக்குறைவு, அரசு பெண் மருத்துவரின் அலட்சியத்தால், சகிக்கு ரத்தப்போக்கு அதிகமாகி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு, தாய், சேய் இறந்துவிட்டனர். இதற்கு காரணமான, பெண் மருத்துவர் உள்பட மூவர் மீது, துறை, குற்றவியல் நடவடிக்கை எடுத்து, இருவரின் இறப்புக்கு நியாயம் கிடைக்க வழிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, 30 நிமிட போராட்டத்துக்கு பின், துணை இயக்குனர் நிர்மல்சனிடம், மனு அளித்தனர். உரிய விசாரணை நடத்தப்படும் என, அவர், கூறியதால், முற்றுகையை கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X