இனுங்கூரில் போலி மருத்துவர், உதவியாளர் தப்பி ஓட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
08:58

குளித்தலை: இனுங்கூரில், மருந்து கடையில் மக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்த போலி மருத்துவர், உதவியாளர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


குளித்தலை அடுத்த, இனுங்கூர் மெடிக்கல் சென்டரில் மக்களுக்கு, ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிப்பதாக வந்த புகார்படி, குளித்தலை அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி ஸ்ரீகாந்த், ஆர்.ஐ., மாரியப்பன், வி.ஏ.ஓ., கரும்பாச்சலம் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர், நேற்று முன்தினம் இனுங்கூர் கிராமத்தில் பிரார்த்தனா மருந்து கடையில் ஆய்வு செய்தனர். அப்போது, சட்டத்திற்கு புறம்பாக, உரிய ஆவணம் இல்லாமல் திருச்சி மாவட்டம், இனாம் புலியூரை சேர்ந்த போலி மருத்துவர் மோகன்ராஜ், 50, எம்.டி., டி.ஏ., படித்து இருப்பதாகவும், இவருக்கு உதவியாக இருந்த ராஜி, 33, ஆகியோர் மருத்துவ படிப்பு படிக்காமல், மருத்துவம் செய்து வந்தது தெரியவந்தது. மேலும் இங்கிருந்த ஆங்கில மருந்து, மாத்திரைகள், ஊசி ஆகியவை கைப்பற்றப்பட்டது. போலி மருத்துவர் மோகன்ராஜ் பின்புறம் வழியில் தப்பி ஓடிவிட்டார். ராஜி தலைமறைவாக உள்ளார். இதுகுறித்து, அரசு மருத்துவமனை அதிகாரி ஸ்ரீகாந்த் கொடுத்த புகார்படி, போலி மருத்துவர் மோகன்ராஜ், ராஜி ஆகிய இருவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X