ஊரடங்கால் பெரிய விநாயகர் சிலைகளுக்கு ஆர்டர் இல்லை: தொழிலாளர்கள் புலம்பல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
08:59

கரூர்: ஊரடங்கு உத்தரவால், விநாயகர் சதுர்த்தியின் போது, பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை, செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால், சிறிய அளவிலான சிலைகளை தயார் செய்வதால், தொழிலாளர்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.


ஆண்டுதோறும் ஆவணி மாதம், சதுர்த்தி நட்சத்திரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. ஹிந்து அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தி மூன்றாம் நாள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, நீர் நிலைகளில் கரைக்கப்படும். அதற்காக, ஐந்து அடி முதல், 15 அடி வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி, ஒரு மாதத்துக்கு முன்பே துவங்கி விடும். ஆனால், நடப்பாண்டு கொரோனா பரவலை தடுக்க வரும், 31 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், விநாயகர் சதுர்த்தி நாளான வரும், 22ல் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை, பிரதிஷ்டை செய்ய முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், வீட்டில் வைத்து சுவாமி கும்பிடும் வகையில், சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை, தொழிலாளர்கள் தயார் செய்து வருகின்றனர்.


இதுகுறித்து, விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறியதாவது: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், விநாயகர் சதுர்த்தி நாளில், சிலைகளை பிரதிஷ்டை செய்யவும், கரைக்கவும் வாய்ப்பில்லை. இதனால், ஹிந்து அமைப்புகள் உள்ளிட்ட, பல்வேறு அமைப்பினர் பெரிய அளவிலான, சிலைகளை ஆர்டர் கொடுக்கவில்லை. கரூர் மாவட்டத்தில், வட மாநிலங்களை சேர்ந்த ஏழு குடும்பத்தினர், கரூரை சேர்ந்த, 10 குடும்பத்தினர் சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டோம். அதில், ஊரடங்கு உத்தரவால், வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். சிலை செய்யும் பணிகளை ஆனி மாதமே துவங்கி விடுவோம். ஐந்து அடி முதல், 15 அடி வரை உள்ள பல்வேறு வண்ணங்களில் விநாயகர் சிலைகள், 5,000 ரூபாய் முதல், 75 ஆயிரம் ரூபாய் வரை விலை போகும். நடப்பாண்டு, பெரிய சிலை கேட்டு யாரும் வராததால், வீடுகளில் வைத்து, சுவாமி கும்பிடும் வகையில், சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை தயாரித்து வருகிறோம். அந்த சிலைகள், 100 ரூபாய் முதல், 500 ரூபாய் வரைதான் விற்க முடியும். நீரில் கரையும் வகையில், சுண்ணாம்பு தூளில் சிலைகள் செய்வதால், பெரிய வருமானம் கிடைக்காது. ஏற்கனவே, ஊரடங்கால் கடந்த மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் கோவில் திருவிழாக்கள் நடக்கவில்லை. அப்போது, தயாரிக்கப்பட்ட அக்னிசட்டி, பொம்மைகள் விற்பனை ஆகவில்லை. தற்போது, விநாயகர் சதுர்த்தி சீசனும் அடி வாங்கி, வருமான இழப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X