ஆயிரக்கணக்கானோருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
08:59

கரூர்: கரூர், தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவி தொகைகளுக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: மாவட்டத்தில் முதல்வர் சிறப்பு மக்கள் குறைதீர் திட்டத்தின் கீழ், 35 ஆயிரத்து, 327 மனுக்கள் பெறப்பட்டு, 23 ஆயிரத்து, 939 மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 8,000 பேருக்கு முதியோர், விதவை உதவித்தொகை உள்ளிட்ட எட்டு வகையான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும், சம்பந்தப்பட்ட பகுதிகளின் மக்கள் பிரதிநிதிகள் மூலம், 1,266 நபர்களுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணைகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2016 முதல், 2020 வரை, 20 ஆயிரத்து, 897 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். முன்னதாக, கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படவுள்ள டென்னிஸ் மைதானத்திற்கான பணியை, பூமி பூஜைசெய்து தொடங்கி வைத்தார். கலெக்டர் அன்பழகன், டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், ஆர்.டி.ஓ., பாலசுப்பிரமணியன், மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் நெடுஞ்செழியன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் முத்துக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X