அமராவதி அணை நீர்மட்டம் 4.5 அடி உயர்வு; சாகுபடி பணியில் கரூர் விவசாயிகள் தீவிரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
09:01

கரூர்: அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று வினாடிக்கு, 2,000 கன அடியை தாண்டியது. இதனால், நேற்று ஒரே நாளில் அணை நீர்மட்டம், 4.53 அடி உயர்ந்தது. இதையடுத்து, கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆற்றுப்பாசன பகுதிகளில், விவசாய பணிகள் துவங்கியுள்ளன.


கேரளா மாநிலம், மேற்கு தொடர்ச்சி மலையில், அமராவதி ஆறு உற்பத்தியாகிறது. அங்கிருந்து செல்லும் தண்ணீர், திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையில் உள்ள அமராவதி அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆற்றில் உள்ள, 18 வாய்க்கால்கள் மூலம், 25 ஆயிரத்து, 248 ஏக்கரும், சின்னதாராபுரம், நஞ்சைகாளக்குறிச்சி, அணைப்பாளையம் பகுதியில், மூன்று பழைய அணைக்கட்டுகள், செட்டிபாளையத்தில் உள்ள தடுப்பணைகளில் பிரியும், நான்கு பழைய பாசன வாய்க்கால்கள் மூலம், 13 ஆயிரத்து, 175 ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் கேரளா உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை காரணமாக அமராவதி அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்தது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு, 564 கன அடி தண்ணீர் வந்தது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 52.99 அடியாக இருந்தது. அன்று மாலை தண்ணீர் வரத்து, 1,200 அடியாக அதிகரித்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 2,909 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இதனால், அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில், 4.53 அடி உயர்ந்து, 57.92 அடியானது. மேலும், அணை நீர்பிடிப்பு பகுதியில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால், அணைக்கு வரும் தண்ணீரின் அளவு இன்று முதல், மேலும் அதிகரிக்கக்கூடும். இந்நிலையில், இம்மாத இறுதியில் நெல் சாகுபடிக்காக அமராவதி அணையில் இருந்து, தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால், கரூர் மாவட்டத்தில், அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை வட்டார பகுதிகளை சேர்ந்த, அமராவதி ஆற்றுப்பாசன விவசாயிகள், நிலத்தை சாகுபடிக்கு தயார்படுத்தும் பணியை துவக்கியுள்ளனர்.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X