| வருவாய்த்துறை அலுவலர்கள்தற்செயல் விடுப்பு போராட்டம் Dinamalar
வருவாய்த்துறை அலுவலர்கள்தற்செயல் விடுப்பு போராட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
23:46

விருத்தாசலம் : விருத்தாசலம் கோட்டத்தில், வருவாய்த்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கொரோனாவால் இறந்த அரசு ஊழியர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகை ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும்.பாதித்த ஊழியர்களுக்கு அரசு செலவில் மருத்துவ சிகிச்சை மற்றும் ரூ. 2 லட்சம் நிவாரணம், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கவச உடை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் இரண்டு நாட்கள் (5 மற்றும் 6ம் தேதி) தற்செயல் விடுப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.



அதன்படி, விருத்தாசலம் சப் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்டம், கோட்ட கலால் அலுவலகம், நத்தம் நிலவரி திட்டம் உள்ளிட்ட அலுவலங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வராமல் போராட்டத்தில்ஈடுபட்டனர்.தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர் சங்கத்தினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால், வருவாய்த்துறை பணிகள் பெருமளவு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X