| பெண்ணையாற்றில் புதிய பாலம்கடலுாரில் ஆயத்த பணிகள் தீவிரம் Dinamalar
பெண்ணையாற்றில் புதிய பாலம்கடலுாரில் ஆயத்த பணிகள் தீவிரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
23:51

கடலுார் : கடலுார் மஞ்சக்குப்பம் பெண்ணையாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.



கடலுாரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, கடலுாரில் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு, திருப்பாதிரிபுலியூர் கெடிலம் ஆகிய இரு ஆறுகளின் குறுக்கே புதிய பாலங்கள் அமைக்க, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.முதற்கட்டமாக பெண்ணையாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ரூ. 22 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.


இதையடுத்து, பெண்ணையாற்றில் தற்போதைய பாலம் அருகே உள்ள ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட பழைய பாலம் இடிக்கப்பட்டு, புதிய பாலம் கட்டப்பட உள்ளது. பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அதற்கான ஆயத்த பணிகள் துவங்கியது.இடிக்கப்பட்ட பழைய பாலத்தின் வழியாக சென்ற, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய், தற்போதுள்ள பயன்பாட்டில் உள்ள பாலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஸ்ரீதேவி தலைமையில் பாலம் அமைய உள்ள இடம், இணைப்பு சாலை பகுதி உள்ளிட்டவை அளவீடு செய்யும் பணி நடந்தது. ஆயத்த பணிகள் முடிந்ததும் இம்மாத இறுதிக்குள் பாலம் கட்டும் பணி துவங்கும் என தெரிகிறது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X