சஸ்பெண்ட் நடவடிக்கை தொடருமா? சிதம்பரம் நகராட்சி ஊழியர்கள் அச்சம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
00:03

சிதம்பரம் : சிதம்பரம் நகராட்சி ஊழியர் இருவர் சஸ்பெண்ட் ஆன நிலையில் மேலும் சிலர் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என்ற தகவல் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.



சிதம்பரம் நகராட்சியில் கடந்த மாதம் ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்த டிபாசிட் தொகையை இரு முறை வழங்கியது தணிக்கையின் போது தெரிந்தது. அந்த பிரச்னையில் நகராட்சி உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில் பதிவறை எழுத்தர் அசோக்குமாரை சஸ்பெண்ட் செய்து, இதற்கு முன் பதவியில் இருந்த கமிஷனர் சுரேந்தர்ஷா உத்தரவிட்டார்.உத்தரவை ஏற்க மறுத்த அசோக்குமாருக்கு ஆதரவாக முன்னாள் தி.மு.க., கவுன்சிலர்கள் நகராட்சி முன்பு போராட்டம் நடத்தியதால், சஸ்பெண்ட் உத்தரவு நிறுத்தப்பட்டது.



இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு கமிஷனராக பொறுப்பேற்ற அஜிதா பர்வீன் நேற்று முன் தினம் நகராட்சி உதவியாளர் கனிமொழி, 45; பதிவறை எழுத்தர் அசோக்குமார்,35; ஆகியோரை சஸ்பெண்ட் செய்தார்.ஆறு பேருக்கு மெமோஇதே பிரசசனையில் மேலும் 6 பேருக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரி வசூலுக்காக பெறப்பட்ட காசோலைகள் பல நகராட்சி வங்கி கணக்கில் வரவு வைக்காமலேயே ரசீது கொடுத்ததாக கூறப்படுகிறது. சுமார் 70க்கும் மேற்பட்ட காசோலைகள் மூலம் நகராட்சிக்கு, ரூ.40 லட்சத்திற்கும் அதிகமாக வசூலாகாமல் உள்ளதாக கூறப்படுகிறது.



சிதம்பரம் நகராட்சியில், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, அடுத்தடுத்து பல்வேறு புகார்களால், மேலும் சில நகராட்சி ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இது ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X