மேற்படிப்புக்கு சாதிச்சான்று கிடைக்காமல் பழங்குடி இருளர் இன மாணவி பரிதவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
01:18

விழுப்புரம் : மேற்படிப்புக்கு சாதிச்சான்று வழங்குமாறு, பழங்குடி இருளர் மாணவி, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.



விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகா, கஞ்சனுார் அடுத்த கொரலுார் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மனைவி சுமதி, அவரது மகள் ரம்யா மற்றும் குடும்பத்தினர், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று காலை கோரிக்கை மனு அளித்தனர். மனு குறித்து சுமதி கூறியதாவது:விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகா, கஞ்சனுார் அடுத்த கொரலுார் கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருகிறோம். பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்த எனது மகள் ரம்யா (வயது 17), மகன் ராகுல் (வயது 16) ஆகியோருக்கு, இருளர் சாதிச் சான்று கேட்டு, கடந்த 24.3.2014 அன்று வருவாய் கோட்டாட்சியருக்கு மனு கொடுத்தேன்.



மேலும், 5.10.2017 அன்று மீண்டும், எனது பிள்ளைகளுக்கு சாதிச் சான்று கேட்டு மனு கொடுத்துள்ளேன்.இது தொடர்பாக விசாரணை முடிந்து, கோட்டாட்சியர் சாதிச் சான்று வழங்கப்படாததால், பிளஸ் 2 படித்து முடித்துள்ள எனது மகள், மேற்படிக்குக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, எனது மகளின் மேற்படிப்புக்கு தேவைப்படுகின்ற சாதிச் சான்றிதழை உடனடியாக வழங்கிட, கலெக்டர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு சுமதி கூறினார். அப்போது, அவரது மகள் ரம்யா உடனிருந்தார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X