துாங்காநகரம் தொழிற்நகரமாகுமா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
01:27

தமிழகத்தின் 2வது பெரிய தலைநகர், தென்மாவட்டங்களில் பெரியநகரம் என்றெல்லாம் கருதப்படும் மதுரை இன்னும் 'பெரிய கிராமமாகவே' உள்ளது. 35 லட்சம் மக்கள் தொகை கொண்ட மதுரை மாவட்டத்தில் சாலை, குடிநீர், தெருவிளக்குகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்னமும் தன்னிறைவு பெறவில்லை. நுாறு வார்டுகளுடன், 15 லட்சத்திற்கும் மக்கள் தொகை கொண்ட மதுரை மாநகராட்சியில் மத்திய அரசு நிதியுதவியுடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் தற்போது துவங்கியுள்ளன. தாமதமாக நடந்த இப்பணிகள் கொரோனா ஊரடங்கால் மேலும் தாமதமாகும் நிலையில் உள்ளன.ஸ்மார்ட் சிட்டி பணிகள் துரிதப்படுத்தப்படுமாபழைய மத்திய பஸ் ஸ்டாண்ட், ஷாப்பிங் காம்பளக்ஸ் பஸ் ஸ்டாண்ட்டை அகற்றி விட்டு ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும்பணி ரூ.159.70 கோடியில் கடந்தாண்டு ஜனவரியில் துவங்கின. கொரோனா ஊரடங்கால் கிடப்பில் போடப்பட்ட இப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும். ராஜா மில் ரோடு முதல் குருவிக்காரன் ரோடு வரை வைகையின் இரு கரைகளையும் மேம்படுத்தி பூங்காவுடன் ரோடு அமைக்கும் பணி மந்த கதியில் நடக்கிறது. தடுப்பணைகள் மட்டும் கட்டப்பட்டுள்ளன. ரூ.40.19 கோடியில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் இடத்தில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் , புராதன அங்காடி மையம், சுற்றுலா மையம் அமைக்கும் பணிகளும் இழுத்து கொண்டே செல்கின்றன. உலக அதிசயங்களில் ஒன்றான மீனாட்சி அம்மன்கோயிலை சுற்றியுள்ள புராதன இடங்களை இணைக்க ரூ.21.70 கோடியில் புராதன வழித்தடம் பணிகள் துவங்கி ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனை துரிதப்படுத்த வேண்டும்.ரோடுகளில் வெளியேறும் கழிவுநீர்புது மண்டபத்திலுள்ள கடைகளை குன்னத்துார் சத்திரத்திற்கு மாற்றி அமைக்கும்பணி, கோயிலை சுற்றி நான்கு சித்திரை வீதிகள், மீனாட்சி பூங்காவை மேம்படுத்தும் பணி, மன்னர் திருமலை நாயக்கர் மகாலை பகுதிகளை மேம்படுத்தும் பணிகள் நீண்ட இழுபறியில் உள்ளன. இத்துடன் முப்பதுஆண்டுகளுக்கு முன் நகரில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய்களால் ஆங்காங்கு கழிவுநீர் வெளியேறி கோயில் நகரை சுகாதார சீர்கேட்டில் தவிக்க வைக்கிறது. அவற்றை மாற்றி அமைக்க வேண்டும். கோயிலை சுற்றி அமைந்த வீதிகள்,ரோடுகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட பொலிவுபடுத்த வேண்டும்.பெரியாறு குடிநீர் வருமாதற்போது மதுரை நகருக்கு வைகை 1, 2 வது திட்டங்கள், காவிரி கூட்டு குடிநீர் மற்றும் உள்ளூர் ஆதாரங்களில் இருந்து குடிநீர் பெறப்படுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு இந்த குடிநீர் போதியதாக இல்லை.இதற்காக பெரியாறு அணையிலிருந்து நேரடியாக மதுரைக்கு பைப் லைன்கள் மூலம் குடிநீர் கொண்டு வர ரூ.1200 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்.பிளாஸ்மா வங்கி விரைந்து அமையுமாகொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் மதுரை மாவட்ட , மாநகராட்சி மற்றும் அரசு மருத்துவமனை நிர்வாகங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது வரவேற்கத்தக்கது. அதுபோல அதிகரித்துள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஏற்ப கொரோனா சிறப்பு மருத்துவமனை, தோப்பூர் உள்ளிட்ட இடங்களில் கோவிட் கேர் சென்டர்கள் என்பது போன்ற நடவடிக்கைகள் பாராட்டத்தக்கன. அத்துடன் கொரோனா தடுப்பு மருந்துகள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கவும், பிளாஸ்மா வங்கி அமைக்கவும் முதல்வர் உத்தரவிட வேண்டும்.எய்ம்ஸ் மருத்துவமனையில் அமையும் தோப்பூரில் தற்போது சுற்றுச்சுவர் கட்டுமான பணி நடக்கிறது.இதற்காக கடன் வழங்கும் ஜப்பான் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை விரைந்து மேற்கொண்டு மத்திய அரசுடன் இணைந்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.கனவாகும் கனரக தொழிற்சாலைகள்தென்மாவட்டங்களில் 1997 ல் ஏற்பட்ட ஜாதி கலவரங்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததே முக்கிய காரணம் என அப்போதைய மாநில அரசு அமைத்த நீதிபதி ரத்தினவேல்பாண்டியன் கமிஷன் குறிப்பிட்டது. அதன்படி மதுரையிலோ பக்கத்து மாவட்டங்களிலோ கனரக பெரிய தொழிற்சாலைகள் இல்லை. மதுரை - துாத்துக்குடி தொழில் வழித்தட திட்டமும் சொல்லி கொள்ளும்படி இல்லை. மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து விட்டு பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். மதுரையில் சிறிதும் பெரிதுமாக 60 ஐ.டி., கம்பெனிகள் உள்ளன. இலந்தைகுளம், வடபழஞ்சி ஐ.டி., பூங்காக்களை மேம்படுத்தி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.சென்னையை சுற்றி அமையும் கார் தொழிற்சாலை உள்ளிட்டவைகளை மதுரையில் அமைக்க வேண்டும். கப்பலுார், உறங்கான்பட்டி, கே.புதுார் சிட்கோ தொழிற்பேட்டைகளை மேம்படுத்திட வேண்டும்.பாதியில் இழுபறியில் பாலங்கள்போக்குவரத்து நெரிசல்மிகுந்த முக்கிய சந்திப்புகளில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படுகின்றன. தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் காளவாசல் சந்திப்பில் ரூ.54 கோடியில் திண்டுக்கல் - பழங்காநத்தம்ரோட்டை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு கடந்த ஏப்ரலில் முதல்வர் திறந்துவைத்தார். ஆனால் இந்த சந்திப்பில் போக்குவரத்து மிகுந்த அரசரடி-பீ.பீ.சாவடியை இணைக்கும் வகையில் பாலம் இடம்பெறாதது மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. இதுகுறித்து முதல்வர் நிபுணர் குழுவை அமைத்து பாலம் அமைப்பதற்கான சாத்திய கூறுகளை ஆராய வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி கோரிப்பாளையம் சந்திப்பில்உயர்மட்ட சுற்றுபாலம் அமைக்க முதல்வர் உத்தரவிட வேண்டும். ரிங்ரோடு பாண்டி கோயில்அருகில் நடக்கும் பால பணிகளை விரைவுபடுத்திட வேண்டும்.மெட்ரோ ரயில் திட்டம்புராதன நகரான மதுரை, மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியே அமைந்துள்ளது. இதனால் கோயிலை சுற்றியுள்ள ரோடுகள் போக்குவரத்து நெரிசல்மிகுந்து காணப்படுகின்றன. மாநகராட்சி எல்லை விரிவடைந்து கொண்டே செல்கிறது. மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. போக்குவரத்தை எளிதாக்க, கோவைக்கு அறிவித்தது போன்று மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். இதற்கான நிதியை ஒரே தவணையில் மத்திய அரசிடம் கேட்டு பெற்று விரைந்து நிறைவேற்ற வேண்டும்.விமான நிலைய மேம்பாடுமதுரை விமான நிலையத்தில் பெரிய ரக விமானங்கள் வந்து இறங்க வசதியாக தற்போது 7000 அடி நீளமுள்ள விமான ஓடுபாதையை 12 ஆயிரம் அடி நீடிக்க விமான போக்குவரத்து ஆணையம் ஒப்புதலளித்து விட்டது. இதற்காக பாப்பனோடை, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் 650 ஏக்கர் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் நிலஉரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி நிலங்களை ஆர்ஜிதம் செய்து விமான போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்படைப்பது பத்தாண்டுகளாக இழுபறியில் உள்ளது. மத்திய விமான போக்குவரத்து ஆணையத்தை வலியுறுத்தி மற்ற நாடுகளுடனான ஒப்பந்தத்தில் மதுரையையும் இணைத்தால் மட்டுமே மேலும் சில வெளிநாடுகளுக்கு இங்கிருந்து நேரடியாக விமானங்களை கையாள முடியும். இரவு நேர விமான போக்குவரத்தையும் துவக்க முதல்வர் தனி கவனம் செலுத்தி மதுரை விமான நிலைய மேம்பாட்டுக்கு உதவிட வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி மதுரையில் விமானவியல் பல்கலை அமைக்க வேண்டும்.சுற்றுச்சாலையில் சுறுசுறுப்பு தேவைமதுரை மேலுார் ரோடு முதல் திருமங்கலம் வரை 27 கி.மீ., துாரத்திற்கு ரிங் ரோடு உள்ளது. 2வது கட்டமாக மேலுார் ரோடு, திண்டுக்கல் ரோட்டை இணைக்கும் வகையில் 2வது ரிங் ரோடு பணிகளை விரைவுபடுத்த வேண்டும். 3வது கட்டமாக திண்டுக்கல்- திருமங்கலம் ரோடுகளை இணைக்க 3 வது ரிங் ரோடு அமைக்க வேண்டும். மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட்டை விரிவுபடுத்த வேண்டும். மதுரையை மையமாக வைத்து சுற்றுலா பேக்கேஜ் வாகனங்களை இயக்க வேண்டும். சுற்றுலா,ஆன்மிக தலங்களை மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.இப்படி மேலும் பல திட்டங்களை குறிப்பிட்டு கொண்டே செல்லலாம். எனவே மதுரை மக்களின் நலனை கருத்தில்கொண்டு முக்கிய திட்டங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து நிறைவேற்ற முதல்வர் பழனிசாமி மனது வைக்க வேண்டும்.மக்கள் பிரதிநிதிகளும் முதல்வருடன் இணைந்து மதுரையின் வளர்ச்சிக்காக செயல்பட வேண்டும். அப்படி...மதுரைக்கு நிறையவே நல்லது செய்யுங்கள். மக்கள் உங்களை மறக்க மாட்டார்கள்.நாளிதழும் கவன கட்டுரையும்மறைந்த ஜெயலலிதா, கருணாநிதி போன்றோர் முதல்வராக இருந்த காலங்களில் அவர்கள் மதுரை வரும் போதெல்லாம் இதுபோன்று 'முதல்வர் கவன கட்டுரைகளை' வெளியிடுவதை தினமலர் வழக்கமாக கொண்டிருந்தது. அரசியல் உள்நோக்கமின்றி மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு வெளியான கட்டுரைகளை அவர்கள் படித்து உடனடியாக நிறைவேற்றியிருக்கின்றனர். அதன்படி முதல்வர் பழனிசாமி கவனத்திற்கு இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arun - Chennai,இந்தியா
06-ஆக-202010:13:11 IST Report Abuse
arun appreciate the efforts taken by Dinamalar in highlighting the issues faced by & development projects required for Madurai on the eve of the visit of the CM. Request that similar efforts to be taken for other cities/districts also.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X