| மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிறப்பான சிகிச்சை தொற்றில் இருந்து மீண்ட டாக்டர் சொல்கிறார் Dinamalar
மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிறப்பான சிகிச்சை தொற்றில் இருந்து மீண்ட டாக்டர் சொல்கிறார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
01:29



மதுரை, ''மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது,'' என, தொற்றில் இருந்து மீண்ட மனநல டாக்டர் ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனரான அவர் கூறியதாவது: சில வாரங்களுக்கு முன் திடீரென உடல் வலி ஏற்பட்டது. காய்ச்சல் அறிகுறி தென்பட்டது. கொரோனா சந்தேகம் ஏற்பட்டதால், குடும்பத்தோடு பரிசோதனை மேற்கொண்டேன். அனைவருக்கும் தொற்று உறுதியானது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்ந்தேன்.இங்கு அனைத்து கட்டமைப்பு வசதிகளும் கச்சிதமாக உள்ளன. விசாலமான கட்டடங்கள், போதிய டாக்டர், நர்ஸ், பணியாளர்கள், உயர்தர சிகிச்சை கருவிகள், விலை உயர்ந்த மருந்துகள் உள்ளன. ஒரு டோஸின் விலையே ரூ.50 ஆயிரம் இருக்கும் மருந்துகளையும் இலவசமாக கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துகின்றனர். வென்டிலேட்டர், ஆக்ஸிஜன் படுக்கைகள் என தனியார் மருத்துவமனைகளை மிஞ்சும் வசதிகள் இருப்பதை கண்டு ஆச்சர்யம் அடைந்தேன்.டீன் சங்குமணி தலைமையில் மருத்துவக் குழுவினர் நோயாளிகளிடம் கனிவு காட்டி மனதளவில் பலப்படுத்துகின்றனர். 24 மணி நேரமும் கவனிப்பு கிடைக்கிறது.எனவே தான் ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளிகளைமீட்க முடிகிறது. தரமான அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. காலையில் கபசுர குடிநீர், இட்லி, பொங்கல், சூப், பகலில் ருசியான உணவு, மாலையில் டீ, சுண்டல், இரவு உணவு தருகின்றனர். இதற்கு அமைச்சர் உதயகுமார் நடத்தும் அம்மா சாரிடபிள் அறக்கட்டளை பெரியளவில் உதவி செய்கிறது.தொற்று வந்தால் மக்கள் மனம் உடைய வேண்டாம். உடனடியாக பரிசோதனை செய்து சிகிச்சை பெறுங்கள். வெளியில் செல்வோர் மாஸ்க் அணியுங்கள். அடிக்கடி சோப்பால் கைகளைகழுவுங்கள்.சமூக இடைவெளி இல்லாத இடத்திற்கு செல்லாதீர்கள். பேரிடர் காலத்தில் சந்திக்கும் வசதி குறைவுகளை சகித்து அரசுக்கு ஒத்துழைத்தால் கொரோனாவை விரைவில் துரத்திவிடலாம், என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X