போலீஸ் செய்திகள்:  சிவகங்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
02:02

போக்சோவில் இளைஞர் கைது



காரைக்குடி: சாக்கோட்டை அருகே உள்ள தச்சப்பிலான்பட்டியை சேர்ந்தவர் கார்த்தி 20. இவர் பனம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதல் செய்வதாக ஆசைவார்த்தை காட்டி நெருங்கி பழகியுள்ளார். சிறுமி கர்ப்பமடைந்தார். இதனை, அறிந்த சிறுமியின் தாயார் காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுந்தரி போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்தியை கைதுசெய்தார்.



கட்டட ஊழியர் மர்ம சாவு



சிவகங்கை: மதுரை விளாங்குடி செம்பருத்தி நகர் காணிக்கைராஜ் 34. திருமணம் முடிந்து ஓராண்டாகிறது. 2 மாதமாக சிவகங்கை அருகே ரோஸ்நகரில் கட்டுமான பணியில் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கட்டடத்திற்கு முன் இரும்பு கட்டிலில் துாங்கிய நிலையில் இறந்து கிடந்தார். கழுத்து இறுகிய நிலையில் காணப்பட்டது. இன்ஸ்பெக்டர் மோகன், எஸ்.ஐ.,வெள்ளைச்சாமி விசாரிக்கின்றனர்.



வி.ஏ.ஓ.,க்கு கொலை மிரட்டல்



மதகுபட்டி: கல்லல் அருகே கத்தப்பட்டு வி.ஏ.ஓ., வித்யா 32. இவரது கணவர் பிரவலுார் மணிகண்டன். சில மாதங்களாக கணவரை விட்டு பிரிந்து, மதகுபட்டியில் தனி வீட்டில் வசிக்கிறார். குடும்ப பிரச்னை காரணமாக ஆக.,1 அன்று மாலை 6:30 மணிக்கு வி.ஏ.ஓ., வீட்டிற்கு சென்ற அவரது கணவர் மணிகண்டன், இவரது தாய்மாமன் முருகன், மற்றொரு முருகன், மணிகண்டனின் அண்ணன் ஸ்ரீதர், சித்தி மகன் அருண்குமார் ஆகிய 5 பேரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்தனர்.மதகுபட்டி எஸ்.ஐ., தமிழரசன், வி.ஏ.ஓ.,விற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிந்தார்.



இதுகுறித்து மணிகண்டன் கூறியதாவது, வி.ஏ.ஓ., அளித்த புகார் முழுவதும் சித்தரிக்கப்பட்ட பொய். கலெக்டர், எஸ்.பி.,யிடம் எங்கள் தரப்பு நியாயத்தை புகாராக அளித்துள்ளோம், என்றார்.



80 பேர் மீது வழக்கு



மதகுபட்டி: சொக்கநாதபுரம் ஊராட்சி தலைவர் கண்ணன். ஆக.,1 ம் தேதி இவருக்கு சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஆக.,4 ம் தேதி மாலை 3:30 மணிக்கு கிராமத்தினர் சொக்கநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். மதகுபட்டி எஸ்.ஐ., தமிழரசன் மற்றும் போலீசார் 144 தடையை மீறி, கொரோனா வைரஸ் பரப்பும் நோக்கில் கூடியதாக ஊராட்சி தலைவர் கண்ணன் உட்பட 80 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.



சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது



சிப்காட்: மானாமதுரையில் சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை சிப்காட் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மானாமதுரை பட்டத்தரசி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை,மானாமதுரை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கார்த்திக் 19,நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு கடத்தி வந்துள்ளார்.சிறுமி காணாமல் போது குறித்து பெற்றோர் மானாமதுரை சிப்காட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணை செய்து கார்த்திக் வீட்டில் இருந்து சிறுமியை மீட்டு கடத்தி சென்ற அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X