| பாடப்புத்தகம் வழங்கல் கல்வித்துறை எச்சரிக்கை Dinamalar
பாடப்புத்தகம் வழங்கல் கல்வித்துறை எச்சரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
02:04

மதுரை, 'மதுரையில் பாடப்புத்தகங்கள் வழங்கும் போது பள்ளிகளில் சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும்,' என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.மாவட்டத்தில் 7 முதல்- 9 ம் வகுப்பிற்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகிறது. சில பள்ளிகள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என புகார் எழுந்தது. முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வில்லுார், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி, டி.குன்னத்துார், அப்பக்கரை தொட்டியப்பட்டி பள்ளிகளில் ஆய்வு செய்தார்.வில்லுார் தொடக்க பள்ளியில் சமூக இடைவெளி பின்பற்றாமல் பெற்றோர், மாணவர்கள் கூட்டமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார். புத்தகம் வழங்கும் பள்ளிகளில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்றாதது தெரிந்தால் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை எச்சரித்துள்ளது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X