| கொரோனா தொற்று குறைந்தாலும் பரிசோதனை குறைக்கப்படவில்லை அமைச்சர் உதயகுமார் தகவல் Dinamalar
கொரோனா தொற்று குறைந்தாலும் பரிசோதனை குறைக்கப்படவில்லை அமைச்சர் உதயகுமார் தகவல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
02:04


மதுரை, ''கொரோனா தொற்று குறைந்தாலும் மருத்துவ பரிசோதனை குறைக்கப்படவில்லை,'' என, மதுரையில் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் இன்று (ஆக., 7) முதல்வர் பழனிசாமி அலுவலர்களுடன் ஆலோசனை செய்கிறார். இந்த ஏற்பாடுகளை அமைச்சர்கள் உதயகுமார், செல்லுார் ராஜூ ஆய்வு செய்தனர்.பின் அமைச்சர் உதயகுமார் கூறியதாவது: இங்கு மார்ச் 23 கொரோனா தொற்று ஏற்பட்டது. ஜூனில் மின்னல் வேகத்தில் பரவத்துவங்கியது. ஒன்றரை மாதம் உச்சத்தில் இருந்த இத்தொற்று அரசின் போர்க்கால நடவடிக்கைகளால் படிப்படியாக குறைந்துள்ளது. தொற்று குறைந்தது என்பதற்காக மருத்துவ பரிசோதனை குறைக்கப்படவில்லை. தினமும் 3500 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது, என்றார்.அமைச்சர் செல்லுார் ராஜூ கூறியதாவது: முதல்வர் ரூ.21.56 கோடியில் முடிவுற்ற பணிகளை திறக்கிறார். ரூ.326.10 கோடியிலான பணிகளை துவக்குகிறார். பெரியாறு அணையிலிருந்து நேரடியாக குடிநீர் கொண்டு வரும் ரூ.1254 கோடியிலான திட்டத்தையும் துவக்குகிறார். பாதாள சாக்கடை திட்டம் துவக்கப்படுகிறது, என்றார்.சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன், டி.ஆர்.ஓ., செல்வராஜ், அரசு மருத்துவமனை டீன் சங்குமணி, சுகாதார துணை இயக்குனர் பிரியாராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜசேகரன், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் சுகுமாரன் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X