| தொழிலாளர்களை  இ பாஸ்  இல்லாமல்  அனுமதியுங்கள்  Dinamalar
தொழிலாளர்களை  இ பாஸ்  இல்லாமல்  அனுமதியுங்கள் 
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
02:05

மதுரை, ''தொழிற்சாலைகளில் வேலை செய்வோருக்கு நிறுவனங்கள் தரும் அடையாள அட்டை உள்ளிட்ட அத்தாட்சியை வைத்து கொண்டு இ பாஸ் இல்லாமல் போக்குவரத்திற்கு அனுமதிக்க வேண்டும்,' என, உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.அதன் தலைவர் ஜெயபிரகாசம் கூறியதாவது: இ பாஸ் அமலில் இருப்பதால் தொழிலாளர்கள் முறையாக வேலைக்கு சென்று வர முடியவில்லை. தற்போது ஞாயிறு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இருப்பதால் பல மாநிலங்களில் சிறு வணிகம் செய்வோர், தெருவோர கடைகள் நடத்துவோர், கூலி தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். சனிக்கிழமைகளில் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது என சில மாநிலங்களில் ஞாயிறு முழு ஊரடங்கை தளர்த்தியது போல் இங்கும் தளர்த்த வேண்டும். தமிழகத்திற்குள் தொழிலாளர்கள் சென்று வர பொது போக்குவரத்தை இயக்க வேண்டும், என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X