| அதிகரிக்கும் வாகன திருட்டுகள் Dinamalar
அதிகரிக்கும் வாகன திருட்டுகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
02:05

மதுரை, மதுரை நகரில் டூவீலர்கள் திருட்டு அதிகரித்து வருகிறது.ஊரடங்கு தளர்வால் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. பெரும்பாலனோர் டூவீலர்களில் சென்று வருவதை விரும்புகின்றனர். கடைகள், அலுவலகத்திற்கு செல்வோர் டூவீலர்களை ரோட்டோர 'பார்க்கிங்'கில் நிறுத்துகின்றனர். திரும்பி வரும்போது குறிப்பிட்ட மாடல் டூவீலர்கள் திருடுபோகின்றன. பாண்டி கோயில் ரிங் ரோட்டில் ஒரு மேன்சன் முன் நிறுத்தியிருந்த டாக்டர் அரவிந்த்தின் டூவீலர் திருடுபோனது. திருநகரில் ஒர்க் ஷாப் செட் முன்பு நிறுத்தியிருந்த செந்தில்குமார் டூவீலர் திருடு போனது. கோச்சடை மோட்டார் சர்வீஸ் நிறுவன வளாகத்தில் நிறுத்தியிருந்த பரமக்குடி ரவிச்சந்திரன் கார் திருடுபோனது. தொடர்ந்து வாகனங்கள் திருடுபோவது வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.போலீசார் கூறியதாவது: திருடப்படும் வாகனங்களை குற்றச்சம்பவத்திற்கு பயன்படுத்துவர் அல்லது கிடைத்த விலைக்கு விற்றுவிடுவர். வாங்கியவர்கள் உடனடியாக நம்பர் பிளேட், முகப்பு பகுதி போன்றவற்றை மாற்றி விடுகிறார்கள். கடந்தாண்டு மதுரையில் சிக்கிய வாகன திருடன், வீடு வாடகைக்கு எடுத்து திருட்டு டூவீலர்களை பதுக்கியிருந்தான். சமீபத்தில் பாதிரியார் ஒருவர்கூட டூவீலர் திருட்டு வழக்கில் சிக்கினார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.விரைவில் திருடுபோன டூவீலர்கள் மீட்கப்படும், என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X