| போலீஸ் செய்திகள் Dinamalar
போலீஸ் செய்திகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
02:06

பள்ளியில் திருட்டுமதுரை: ஒத்தக்கடை அருகே மலையாளத்தான்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. ஊரடங்கால் பள்ளி திறக்கப்படவில்லை. இதை பயன்படுத்தி மர்ம நபர்கள் 3 'டிவி', ஒரு சிடி பிளேயர், ஒரு மின் விசிறியை திருடிச்சென்றனர். தலைமையாசிரியை திலகம் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.51,160 பேர் கைதுமதுரை: மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வலம் வந்ததாக இதுவரை 40,057 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 51,160 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12,162 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.உண்டியல் திருட்டுபாலமேடு : கோடாங்கிபட்டியில் கிராம கோடாங்கி அம்மன் கோயில் உண்டியலை திருடிய மர்மநபர்கள் பணத்தை எடுத்து கொண்டு செட்டி குளம் கண்மாயில் உண்டியலை வீசி சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.லாட்டரி விற்றவர் கைதுஅலங்காநல்லுார் : இந்த ஊரை சேர்ந்த முனிராஜ் 36, அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்தார். இவரை கைது செய்த போலீசார் லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.7 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X