அறிவிப்பாரா * பழநியில் சித்த மருத்துவக் கல்லூரியை: திண்டுக்கல் வரும் முதல்வர் கவனத்திற்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
04:31

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அலோபதி மருத்துவத்தைவிட சித்த மருத்துவத்தை நாடுவோர் அதிக அளவில் உள்ளனர்.அரசும் கபசுர குடிநீர், நிலவேம்பை பரிந்துரைத்தது மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்க ஏற்பாடு செய்து நடைமுறைப்படுத்தியுள்ளது.



இந்நிலையில் திண்டுக்கல் பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான சித்த மருத்துவ கல்லூரி அமைய முதல்வரின் வருகையில் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் பலர் உள்ளனர்.பழநி தட்டான்குளத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் சித்தமருத்துவ கல்லூரி அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டது.



பல்வேறு காரணங்களால் கல்லுாரி சென்னைக்கு மாற்றப்பட்டது. ஆனால், கையகப்படுத்திய நிலத்திற்கு உரிமையாளர்களுக்கு முழுத்தொகையும் வழங்கப்பட்டுவிட்டது. அதன்பின் கல்லூரி தொடங்கவில்லை. அங்குள்ள 25 ஏக்கர் நிலமும் அங்குள்ள மருத்துவர்கள் முயற்சியால் அவ்வப்போது சுத்தம் செய்யப்படுகிறது.முதல்வர் பழனிச்சாமி ஏற்கனவே சட்ட சபையில் 110 விதியின் கீழும், தேர்தல் பிரசாரத்திலும் இக்கல்லுாரி அமைப்பது குறித்து பேசியுள்ளார்.



பழநியில் சப் கலெக்டர் அருண்ராஜ் இருந்தபோது கல்லுாரி துவங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில் சித்த மருத்துவ கல்லூரி அமைந்தால் தென்மாவட்ட மக்களுக்கு பேருதவியாக இருக்கும். பழநி சித்த மருத்துவர் மகேந்திரன் கூறுகையில், ''பழநி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இது. ஏற்கனவே முதல்வர் அறிவித்தபடி அரசு உத்தரவிட்டால் உடனே பணிகள் துவங்கும், என்றார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X