| மகனை கொன்ற தந்தை Dinamalar
மகனை கொன்ற தந்தை
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
05:32

திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனின் தலையில் கல்லைப்போட்டு தந்தையே கொலை செய்தார்.



திண்டுக்கல் என். பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யப்பன். தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.இவரது மகன் விக்னேஷ்வரன் 25. ஒர்க்ஷாப்பில் வேலை செய்கிறார். சில வாரங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். தினமும் குடித்துவிட்டு தந்தையிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவும் தகராறு செய்துள்ளார்.



நேற்று காலையில் விக்னேஷ்வரன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அருகிலேயே அவரை கொலை செய்ய பயன்படுத்திய கல் கிடந்தது. சம்பவ இடத்திற்கு சென்று எஸ்.பி.ரவளிபிரியா ஆய்வு செய்தார். தாலுகா ஸ்டேஷனில் சரணடைந்த அய்யப்பனை போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X