| பரிந்துரையின்றி மருந்து விற்க கூடாது Dinamalar
பரிந்துரையின்றி மருந்து விற்க கூடாது
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
05:34

நத்தம்:நத்தம் பகுதியில் டாக்டர் பரிந்துரையின்றி மருந்து விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.



நத்தம் வட்டாரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால், மாவட்ட எல்லை வேம்பரளியில் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டது. இதுவரை 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சமீபத்தில் செந்துறை, கோட்டைபட்டி, பிள்ளையார் நத்தம் பகுதிகளில் சிலருக்கு கொரோனா உறுதியானது.



பலர் காய்ச்சல் அறிகுறியுடன் டாக்டர் பரிந்துரை இல்லாமல் கடைகளில் மருந்து வாங்கி உட்கொள்வதும், ஊசி போடுவதும் தெரியவந்தது. தாசில்தார் ராதாகிருஷ்ணன், மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா, போலீசார் அப்பகுதியில் ஆய்வு நடத்தினர். பரிந்துரையின்றி மருந்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X